விவசாயி, மனைவியை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி; எதுவும் கிடைக்காததால் ஏமாற்றமடைந்த கொள்ளையர்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
18:34

கண்ணமங்கலம்: கண்ணமங்கலம் அருகே விவசாயி, மற்றும் அவரது மனைவியை கட்டிபோட்டு, அவர்களது மகன் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி, வீட்டில் கொள்ளையடிக்க முயன்ற கொள்ளையர்களுக்கு வீட்டில் எதுவும் சிக்காததால் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.


திருவண்ணாமலை மாவட்டம், கண்ணமங்கலத்தை அடுத்த படவேடு பகுதியை சேர்ந்தவர் விவசாயி, மொட்டை, 59; இவர், தனது நிலத்தில், புதிதாக மாடி வீடு கட்டி வசித்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு ராஜா, மகன் ராமகிருஷ்ணனுடன் புதிய மாடி வீட்டில் தூங்கி கொண்டிருந்தனர். மனைவி கவுரி வீட்டின் பின்னால் உள்ள குடிசையில் படுத்துத் தூங்கினர். நேற்று முன்தினம், நள்ளிரவில் இரண்டு பைக்கில் முகமூடி அணிந்து, ஐந்து கொள்ளையர்கள், வீட்டின் பின் பக்க கதவை திறந்து உள்ளே நுழைந்தனர். திடுக்கிட்டு எழுந்த ராஜா, அவரது மகன் ராமகிருஷ்ணன் ஆகியோரை கத்தி முனையில் மிரட்டி நகை, பணம் வைத்திருந்த பீரோ சாவிகளை கேட்டனர். சத்தம் கேட்டு வந்த கவுரியின் கைகளை கட்டிப்போட்டனர். பின்னர் வீட்டினுள் சென்று நகை, பணம் தேடினர். ஆனால், எதுவும் வீட்டில் இல்லை. அங்கிருந்த வெள்ளிக்குத்துவிளக்குளை மட்டும் எடுத்து கொண்டு, கவுரியிடம் தாலியை பறித்தனர். அதில் தாலி மட்டும் இருந்ததால் அங்கேயே போட்டு விட்டு ஏமாற்றத்துடன் சென்றனர். சந்தவாசல் போலீசார், கொள்ளையர்கள் விட்டுச் சென்ற கத்தியை பறிமுதல் செய்து விசாரித்து வருகின்றனர். புதிதாக வீடு கட்ட ராஜா, நகைகளை வங்கியில் அடகு வைத்துள்ளார். இதனால் நகைகள் தப்பியது.


 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X