தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு செத்து விட்டது: முன்னாள் முதல்வர் பழனிசாமி ஆவேசம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

24 செப்
2021
18:35

ராணிப்பேட்டை: ''தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு செத்து விட்டது,'' என, முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசினார்.


ஊரக உள்ளாட்சி தேர்தல் குறித்து அ.தி.மு.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜாபேட்டையில் நேற்று மாலை நடந்தது. அரக்கோணம் தொகுதி எம்.எல்.ஏ., வும், ராணிப்பேட்டை மாவட்ட செயலாளருமான ரவி தலைமை வகித்தார். கழக இணை ஒருங்கிணைப்பாளர், முன்னாள் முதல்வர் பழனிசாமி பேசியதாவது: அ.தி.மு.க., ஆட்சியில் தான் கொரோனா தொற்று பரவாமல் தடுக்க பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தி.மு.க., ஆட்சியில் கொரோனாவை கட்டுப்படுத்தினார்களா? தினம், தினம் அதிக எண்ணிக்கையில் கொரோனா தொற்று உள்ளதாக தகவல்கள் வந்து கொண்டுள்ளன. அ.தி.மு.க., ஆட்சியில் சட்டம் - ஒழுங்கு சரியாக இருந்தது. இப்போது தி.மு.க., ஆட்சியில் தினமும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, வழிப்பறி, செயின் பறிப்பு நடந்து கொண்டுள்ளது. வாணியம்பாடியில் நடந்து சென்ற இஸ்லாமிய சகோதரர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. தி.மு.க., ஆட்சியில் சட்டம்- ஒழுங்கு முற்றிலும் செத்து விட்டது. இப்போது குட்கா லோடு, லோடாக கடத்தப்படுகிறது. இதனால் சமூக விரோதிகள் உருவாகிக் கொண்டிருக்கின்றனர். ஒன்பது மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., அமோகமாக வெற்றி பெறும். இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக வேலூர் மாவட்டம், காட்பாடியில் நடந்த ஆலோசனை கூட்டத்திலும் பழனிசாமி பேசினார். வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் அப்பு, வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் ராணிப்பேட்டை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X