கூடலூர்: கூடலூர் தேவர்சோசலை அருகே புலி தாக்கியதில் தொழிலாளி ஒருவர் பலியானார். புலியை பிடிக்க வலியுறுத்தி தொழிலாளியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நீலகிரி மாவட்டம், கூடலூர் தேவர்சோசலை அருகே, தேவன் எஸ்டேட் பகுதியில், இன்று காலை 11:30 மணிக்கு, மாடு மேய்த்து கொண்டிருந்த சந்திரன், 51, என்ற தொழிலாளி, புலி தாக்கி படுங்காயம் அடைந்தார். வனத்துறையினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக கூடலூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். மேல்சிகிச்சைக்காக ஊட்டி அரசு மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார்.
தகவலறிந்து அப்பகுதி பகுதி மக்கள், புலியை பிடிக்க வலியுறுத்தி, தேவர்சோலை சாலையில், சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால், தமிழக - கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் வனத்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர். ஏற்கனவே, இந்த புலி தாக்கி மசினகுடி , முதுகுழியை சேர்ந்த இருவர் உயிரிழந்துள்ளனர். மண்வயல் பகுதியில் 11 மாடுகளையும் தாக்கி கொன்டுள்ளது குறிப்பிடதக்கது.