ராமேஸ்வரத்தில் அனுமதியின்றி சர்ச்: ஹிந்து மக்கள் கட்சி எதிர்ப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
01:06

ராமேஸ்வரம்:ராமேஸ்வரம் கடலோரத்தில் அனுமதியின்றி கட்டப்பட்ட சர்ச்சை அகற்ற வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.



15 ஆண்டுக்கு முன் ராமேஸ்வரம் ஒலைகுடா சங்குமால் கடற்கரையில் ரூ. 20 லட்சத்தில் மாவட்ட நிர்வாகம் பூங்கா அமைத்தது. காலபோக்கில் நகராட்சி நிர்வாகம் பூங்காவை பராமரிக்காமல் விட்டதால் விளையாட்டு பொருட்கள் காணாமல் போனது.இந்நிலையில் பூங்காவுக்குள் அனுமதியின்றி சர்ச் கட்டப்பட்டு சமீபத்தில் விழா கொண்டாடினர்.



இதற்கு ஹிந்து மக்கள் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்து ராமேஸ்வரம் தாசில்தார், நகராட்சி ஆணையரிடம் புகார் செய்தனர்.ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் பிரபாகரன் கூறியதாவது: இங்கு அனைத்து மதத்தின் குழந்தைகள், மாணவர்கள், பலரும் பொழுது போக்கினர். ஆனால் இங்கு அனுமதி இன்றி கட்டப்பட்ட சர்ச்சால் மக்களுக்குள் மனக்கசப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே இந்த சர்ச்சை அகற்ற வேண்டும், என்றார்.



ராமேஸ்வரம் நகராட்சி ஆணையர் மூர்த்தி கூறுகையில், ஓலைக்குடா சங்குமால் கடற்கரையில் சர்ச் அமைக்க அனுமதியில்லை. தற்போது கட்டியுள்ள சர்ச் குறித்து ஆய்வு செய்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.-

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X