புலி தாக்கி தொழிலாளி பலி | நீலகிரி செய்திகள் | Dinamalar
புலி தாக்கி தொழிலாளி பலி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
01:42

கூடலுார்:கூடலுார் அருகே தொழிலாளியை தாக்கிக் கொன்ற புலியை பிடிக்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டது



நீலகிரி மாவட்டம், கூடலுார் தேவர்சோலையைச் சேர்ந்தவர் சந்திரன், 51; தனியார் எஸ்டேட் தொழிலாளி. இவர் தேவன் எஸ்டேட் பகுதியில் நேற்று மாடு மேய்த்துக் கொண்டுஇருந்தார். அப்போது, திடீரென புதரில் இருந்து பாய்ந்து வந்த புலி அவரை தாக்கியது. படுகாயம் அடைந்தவர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் இறந்தார்.



'புலியை பிடிக்க வேண்டும்; இறந்தவர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும்' என, வலியுறுத்தி, அப்பகுதி மக்கள் தேவர்சோலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். தமிழகம் - கேரளா இடையே போக்குவரத்து பாதிக்கப்பட்டது.




கூடலுார் வன அலுவலர் சச்சின் துக்காராம், ஆர்.டி.ஒ., சரவணகண்ணன், நக்சல் தடுப்பு பிரிவு கூடுதல் எஸ்.பி., மோகன்நிவாஸ் பேச்சு நடத்தினர். இரவு 7:00 மணிக்கு பின்பும் பேச்சு தொடர்ந்தது. எஸ்டேட் பகுதியில் கூண்டு வைத்து புலியை பிடிக்க, வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துஉள்ளனர்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X