வீராணம் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் குறைப்பால் விவசாயிகள் கவலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
03:10

காட்டுமன்னார்கோவில்-சென்னை குடிநீருக்காக வீராணம் ஏரிக்கு வடவாற்றில் இரு நாட்களாக 1400 கன அடி வீதம் தண்ணீர் திறந்து விடப்படுகிறது. வீராணம் ஏரியில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் அளவு குறைக்கப்பட்டதால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். கல்லணையில் 1000 கன அடி தண்ணீர் திறந்ததால் கீழணைக்கு 600 முதல் 700 கன அடி வரத்தாக இருந்தது. இந்த தண்ணீர் டெல்டா பாசனத்திற்கு திறந்ததால், வீராணம் ஏரிக்கு போதிய அளவு திறக்க முடியவில்லை. வீராணம் ஏரியில் இருந்து ஒரு மாதமாக சென்னை குடிநீருக்கு 61 கன அடியும், சாகுபடி பாசனத்திற்கு 300 கன அடி வீதம் தண்ணீர் எடுத்ததால் நீர் மட்டம் சரிந்தது. கடந்த 22ம் தேதி 45 அடிக்கு கீழ் குறைந்ததால், சென்னை குடிநீர் வாரிய அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர். பொதுப்பணித்துறை நீர்பாசனப் பிரிவு அதிகாரிகள் அணைக்கரை கீழணைக்கு கல்லணையில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க கேட்டனர். ஆனால், பொதுப் பணித் துறை உயரதிகாரிகள் தண்ணீர் தர மறுத்தனர். சென்னை மெட்ரோ வட்டார் அதிகாரிகள் நீர்பாசனத் துறை உயரதிகாரிகளிடம் வீராணம் ஏரிக்கு தண்ணீர் கேட்டதால் 22ம் தேதி மாலை முதல் கல்லணையில் இருந்து கீழணைக்கு 2500 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் கீழணைக்கு 2350 கன அடி வீதம் வரத்து உள்ளது. கீழணையில் 8.5 அடி தண்ணீர் உள்ளது. இரு நாட்களாக வீராணம் ஏரிக்கு வடவாற்றில் 1400 கன அடி தண்ணீர் திறக்கப்படுகிறது. ஏரிக்கு 1000 கன அடி தண்ணீர் வரத்து உள்ள நிலையில் ஏரி நீர் மட்டம் மெல்ல உயர்ந்துள்ளது. நேற்று வீராணம் ஏரியில் 45.36 அடி அளவில் 946 மில்லியன் கன அடி தண்ணீர் இருப்பு உள்ளது. தற்போது சென்னை குடிநீருக்கு 64 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. வீராணம் ஏரிக்கு சென்னை மெட்ரோ வாட்டர் அதிகாரிகள் தண்ணீர் கேட்டு வாங்கியதால், டெல்டா பாசனத்திற்கு 37 கன அடி தண்ணீர் மட்டுமே திறக்கப்படுகிறது. இதனால் பாசனத்திற்கு பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். வீராணம் ஏரியில் இருந்து கூடுதலாக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X