அவலுார்பேட்டை அருகே தந்தை கொலை வழக்கில் மகள் விடுவிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
03:15

விழுப்புரம்-அவலுார்பேட்டை அருகே பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற தந்தையை கத்தியால் குத்தி கொன்ற மகளை வழக்கில் இருந்து விடுவித்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.விழுப்புரம் மாவட்டம், அவலுார்பேட்டை அடுத்த கோவில்புரையூரைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 40; மாற்றுத் திறனாளியான இவர், வேன் மூலம் தக்காளி வியாபாரம் செய்து வந்தார். மனைவி இரண்டு ஆண்டுகளுக்கு முன் இறந்து விட்டார். இவருக்கு, 20 மற்றும் 17 வயதில் இரண்டு மகள்கள் உள்ளனர். கடந்த 20ம் தேதி பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற வெங்கடேசனை, அவரது இளைய மகள் கத்தியால் மார்பில் குத்தி கொலை செய்தார். அவலுார்பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து, சிறுமியிடம் விசாரணை நடத்தினர்.இந்நிலையில், தந்தையைக் கொலை செய்த மகளை வழக்கில் இருந்து விடுவித்து எஸ்.பி., ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.அவரது செய்திக்குறிப்பு:வெங்கடேசனின் இளைய மகளிடம் விசாரித்தபோது, அதிக குடிப்பழக்கம் உள்ள தந்தை தன்னிடம் தவறாக நடக்க முயன்றார். இதனால், என்ன செய்வதென்று அறியாமல் காய்கறி நறுக்கும் கத்தியால் தந்தையின் மார்பில் குத்தியதாக கூறினார்.இவ்வழக்கின் விசாரணையில் சிறுமி தன் மானத்தைக் காப்பாற்றிக் கொள்ள தற்காப்பிற்காக கொலை செய்தது தெரியவந்தது. சட்ட வல்லுநர்களிடம் கருத்துரு பெற்று 100 ஐ.பி.சி., சட்டப்பிரிவின்படி சிறுமி கொலை குற்ற வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும், இச்சிறுமிக்கு மனோதத்துவ நிபுணர்கள் மூலம் தக்க சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது, குழந்தைகள் காப்பகத்தில் நல்ல முறையில் உள்ளார்.மாவட்டத்தில் இவ்வாறான சம்பவங்கள் நடைபெற்றால் குழந்தைகள் இலவச அழைப்பு எண்.1098ஐ தொடர்பு கொண்டு தங்களின் குறைகளைத் தெரிவித்தால் உடனடியாக சட்டரீதியாக கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு எஸ்.பி., ஸ்ரீநாதா செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X