நெய்வேலி வீராங்கனைக்கு அரசு வேலை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar advertisement tariff
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
03:15

நெய்வேலி-சர்வதேச அளவில் கபடி போட்டியில் தங்கம் வென்ற ஏழை பெண்ணுக்கு அரசு வேலை, சொந்த வீடு, ரூ.5 லட்சம் உதவி பெற உதவிய சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.கடலுார் மாவட்டம் நெய்வேலி டவுன்ஷிப் வட்டம் 30 ஐ சேர்ந்தவர் சவுந்தரராஜன். இவரது மனைவி அந்தோணிம்மாள், 30; கபடி விளையாட்டு வீராங்கனை. இவர் கல்லுாரியில் படிக்கும் போது மாநில அளவில் 10 பதக்கங்களும், தேசிய அளவில் 8 பதக்கங்களும் பெற்று சிறந்த வீராங்கனையாக தேர்வானவர். கடந்த 2016 ம் ஆண்டு வியட்நாம் நாட்டில் நடந்த ஆசிய கபடி போட்டியில் தங்கப் பதக்கமும், 2017ல் மொரிசியஸ் நாட்டில் நடந்த சர்வதேச கபடி போட்டியிலும் கலந்து கொண்டு தங்க பதக்கம் வென்றுள்ளார்அப்போதைய தமிழக முதல்வர் இவரை நேரில் அழைத்து பாராட்டி ரூ. 5 லட்சம் காசோலை வழங்கும் போட்டோ எடுத்துக் கொண்டு காசோலை வழங்காமல் அனுப்பி வைத்துள்ளனர். குடிசை வீட்டில் வசித்து வரும் அந்தோணியம்மாள் ஏழ்மையான சூழ்நிலையில் கல்லுாரியில் எம்.ஏ.,மற்றும் எம்.எஸ்.டபிள்யு பட்டங்கள் பெற்றுள்ளார்.தனித்திறமையால் கபடி விளையாட்டில் சாதனை படைத்த இவரை தமிழக முதல்வர் ஸ்டாலின் 'உங்கள் தொகுதியில் ஸ்டாலின்' நிகழ்ச்சியில் நேரில் அழைத்து பாராட்டி கபடி விளையாட்டு சாதனையாளர் விருது வழங்கி கவுரவித்தார். இவரது கணவர் பானிப்பூரி விற்று குடும்பம் நடத்தி வருகிறார்.தகவலறிந்த சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ., அந்தோணியம்மாளை அழைத்து சென்று தலைமை செயலகத்தில் தொழிலாளர் நலன் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் கணேசன், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் மெய்யநாதன் ஆகியோரிடம் மனு கொடுத்து அரசு உதவி செய்ய பரிந்துரை செய்தார். விளையாட்டு துறை அமைச்சர் விசாரணை செய்து ரூ.5 லட்சம், சொந்த வீடு மற்றும் அரசு வேலையும் வழங்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஏழை வீராங்கனைக்கு உதவி கிடைக்க முயற்சி மேற்கொண்ட சபா ராஜேந்திரன் எம்.எல்.ஏ.,வுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி கோட்டம்  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X