பறக்கும் படை; உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க...அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் தகவல் | செய்திகள் | Dinamalar
பறக்கும் படை; உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுக்க...அனைத்து கட்சி கூட்டத்தில் கலெக்டர் தகவல்
Advertisement
 

மாற்றம் செய்த நாள்

25 செப்
2021
05:22
பதிவு செய்த நாள்
செப் 25,2021 03:19

புதுச்சேரி-உள்ளாட்சி தேர்தலில் பணப்பட்டுவாடாவை தடுத்திட, பறக்கும் படை மற்றும்நிலைக்குழுக்கள் அமைக்கப்பட உள்ளதாக மாவட்ட தேர்தல் அதிகாரியானகலெக்டர் பூர்வா கார்க் கூறியுள்ளார்.புதுச்சேரி மாநிலத்தில் உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் என மாநில தேர்தல் ஆணையம் கடந்த 22ம் தேதி அறிவித்தது. புதுச்சேரி மாவட்டத்தில் உள்ள 2 நகராட்சிகள், 5 கொம்யூன் பஞ்சாயத்துகளுக்கு முறையே அக்டோபர் 25 மற்றும் 28 ம் தேதிகளில் தேர்தல் நடக்கிறது. இதற்கான மனு தாக்கல் வரும் 4 மற்றும் 7 ம் தேதிகளில் துவங்க உள்ளது.அனைத்து கட்சி கூட்டம்அதனையொட்டி, உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திடும் பொருட்டு, மாவட்ட நிர்வாகம் அனைத்து கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை நேற்று நடத்தியது.கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்த கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் கந்தசாமி, வருவாய் அதிகாரி செந்தில்குமார் ஆகியோர் தேர்தல் நடத்தை விதிகளை விளக்கினர்.கூட்டத்திற்கு தலைமை தாங்கிய தேர்தல் அதிகாரியான கலெக்டர் பூர்வா கார்க் பேசியதாவது:உள்ளாட்சி தேர்தலை அமைதியாகவும், நேர்மையாகவும் நடத்திட மாநில தேர்தல் ஆணையம் விரிவான ஏற்பாடுகள் செய்துள்ளது.தேர்தல் அறிவித்த 22ம் தேதி முதல், தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்துள்ளது. அரசியல் கட்சியினர், கொரோனா பெருந்தொற்றை கருத்தில் கொண்டும், தேர்தல் நடத்தை விதிகளை பின்பற்றிட வேண்டும்.பறக்கும் படைவேட்பாளர்களின் செலவினங்களை கண்காணித்திட செலவின பார்வையாளர்கள் நியமிக்கப்பட உள்ளனர். வாக்காளர்களுக்கு பரிசு பொருட்கள் கொடுப்பதை தடுக்கவும், தேர்தல் நடத்தை விதிகளை மீறுவோர் மீது நடவடிக்கை எடுத்திட பறக்கும் படை மற்றும் நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைத்து வாகன சோதனை நடத்தப்படும்.வேட்பாளர்களின் பிரசாரங்கள் முழுவதும் வீடியோ பதிவு செய்யப்படும். இதற்காக சர்வலைன்ஸ் குழு அமைக்கப்பட உள்ளது. வேட்பாளர்கள், நாளிதழ்கள் மற்றும் டி.வி.,க்களில் விளம்பரம் செய்திட தேர்தல் அதிகாரியின் அனுமதி பெற வேண்டும்.பதட்டமான ஓட்டுச்சாவடிகள் குறித்து கணக்கெடுக்கப்பட்டு வருகிறது. அதுகுறித்து விரைவில் அறிவிக்கப்பட்டு, அந்த ஓட்டு சாவடிகளுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்படும் என்றார்.அரசியல் கட்சிகள் புலம்பல்கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் கட்சி பிரமுகர்கள் பேசியதாவது:பெத்தபெருமாள், காங்.,தேர்தல் நடத்தை விதிகள் அடங்கிய கையேடு ஆங்கிலத்தில் வழங்கப்பட்டுள்ளது. அதனை தமிழில் வழங்க வேண்டும். தேர்தல் தேதி அறிவித்த பிறகும் கூட அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் வழங்கப்படவில்லை. புதுச்சேரிக்கு, தமிழக பகுதிகளில் இருந்து பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு வருவதை தடுக்க வேண்டும். பாரபட்சமின்றி தேர்தலை நடத்திட வேண்டும்.மோகன்ராஜ், அ.தி.மு.க.,அரசியல் கட்சிகளுக்கு வாக்காளர் பட்டியல் மற்றும் வேட்பாளர்களுக்கு வழங்க வேண்டிய ஏ, பி, சி., படிவங்களை வழங்க வேண்டும்.கீதநாதன், இந்திய கம்யூ.,வேட்பாளர்கள், மனு தாக்கலின் போது என்னென்ன ஆவணங்கள் வழங்க வேண்டும் என்பதை முன்பே அறிவிக்க வேண்டும்.தேர்தலில் பணப்பட்டுவாடா நடைபெற வாய்ப்பு உள்ளதால், சோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். தேர்தல் குறித்து அதிகாரிகளுக்கு பயிற்சி அளிப்பது போல், வேட்பாளர்களுக்கும் பயிற்சி அளிக்க வேண்டும்.சத்யா, பா.ம.க.,முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகள் வந்து ஓட்டு போடும் வகையில், ஓட்டுச்சாவடிகளில் சாய்தளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்திட வேண்டும்.அதிகாரி விளக்கம்கந்தசாமி, உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்:அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு விரைவில் வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்.சுயேச்சைகள் அந்தந்த பகுதி தேர்தல் நடத்தும் அலுவலரிடம் பெற்றுக் கொள்ளலாம்.தேர்தல் நடத்தை விதிமுறை கையேடு விரைவில் தமிழில் வழங்கப்படும். அரசியல் கட்சிகளின் பிற கருத்துக்களை, தேர்தல் ஆணையத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X