'5 கே கார் கேர்' நிறுவனத்தின் 80வது கிளை புதுச்சேரியில் திறப்பு | செய்திகள் | Dinamalar
'5 கே கார் கேர்' நிறுவனத்தின் 80வது கிளை புதுச்சேரியில் திறப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
03:37

புதுச்சேரி-புதுச்சேரியில் '5 கே கார் கேர்' நிறுவனத்தின் 80வது கிளையை முதல்வர் ரங்கசாமி துவக்கி வைத்தார்.15 லட்சம் வாடிக்கையாளர்களை கொண்ட'5 கே கார் கேர்' நிறுவனத்தின், 80 வது கிளை, புதுச்சேரி ராஜிவ் காந்தி சதுக்கம் அருகே நுாறடி சாலையில், வெண்ணிலா நகரில் அமைக்கப்பட்டுள்ளது.இதன் துவக்க விழா நேற்று நடந்தது. நிறுவனத் தின் நிர்வாக இயக்குநர் கார்த்திக்குமார் சின்னராஜ் தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, '5 கே கார் கேர்' நிறுவன கிளையை திறந்து வைத்தார்.நிகழ்ச்சியில், யுனிவர்செல் மனித உரிமை பாதுகாப்பு கழக அகில இந்திய துணைத் தலைவர் முருகன், நெல்லிக்குப்பம் முன் னாள் சேர்மன் கெய்க்வாட்பாபு, தொண்டமாநத்தம் ஜெ.பி.ஏ., மெட்டல் முருகானந்தம், புதுவை 5 கே கார் கேர் நிறுவனர்கள் சுந்தரமூர்த்தி, ராஜராஜன், பூராசாமி, தமிழ்நாடு வணிகர் பேரமைப்பு மாவட்ட செயலாளர் சுரேஷ், கருணா கரன், குமார், முத்துசாமி, வேலன் பங்கேற்றனர்.புதுச்சேரி கிளை உரிமை யாளர்கள் ஜெகதீஷ், பழனிவேல், சங்கர நாராயணன் ஆகியோர் விழாவிற்கு வந்தவர்களை வரவேற்று, நன்றி கூறினார். பூஜையை முருகானந்தம் குருக்கள் செய்திருந்தார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X