ஜிப்மரில் இலவச சிகிச்சைக்கு கட்டுப்பாடு | செய்திகள் | Dinamalar
ஜிப்மரில் இலவச சிகிச்சைக்கு கட்டுப்பாடு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
03:46

புதுச்சேரி-சிகப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என்ற ஜிப்மர் நிர்வாகத்தின் முடிவிற்கு எம்.பி., மற்றும் பல்வேறு அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.இதுகுறித்து வைத்திலிங்கம் எம்.பி., அறிக்கை;சிவப்பு அட்டைதாரர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து ஜிப்மர் நிர்வாத்திடம் பேசுவேன். இதற்கு நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை என்றால் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை அணுகி, ஜிப்மர் நிர்வாக உத்தரவை ரத்து செய்யவேண்டும் என வலியுறுத்துவேன்.ரவிக்குமார் எம்.பி.,; ஜிப்மர் நிர்வாம், மாதம் ரூ.2,499 கீழ் வருமானம் உள்ளவர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை வழங்கப்படும் என்பது கண்டனத்திற்குரியது.சிகிச்சைக்கு வரும் புறநோயாளிகள் ரேஷன் கார்டு கொண்டு வர வேண்டும் என்பது நடைமுறை சாத்தியமற்றது. எனவே, இந்த உத்தரவை உடனே திரும்ப பெற வேண்டும்' என, கூறியுள்ளார்.வீரராகவன் பா.ஜ.,: ஜிப்மர் மருத்துவமனை சிவப்பு அட்டை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என அறிவித்திருப்பது துரதிஷ்டவசமானது. இந்த அறிவிப்பால் தமிழகம் மற்றும் புதுச்சேரி பொதுமக்கள் பாதிக்கப்படுவார்கள்.இது குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் தலையிட்டு ஜிப்மர் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது.மா.கம்யூ.,: ஜிப்மர் நிர்வாகம் தனது உத்தரவை வாபஸ் பெறாவிட்டால், மா.கம்யூ., சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என, எச்சரித்துள்ளது.சென்டாக் மாணவர் பெற்றோர் நலச் சங்க தலைவர் நாராயணசாமி: சிவப்பு ரேஷன் கார்டுதாரர்களுக்கு மட்டுமே இலவச சிகிச்சை என்ற ஜிப்மர் மருத்துவமனையின் முடிவை ரத்து செய்திட, புதுச்சேரி அரசு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.கவர்னர் உடனடியாக இப்பிரச்னையில் தலையிடவேண்டும். ஜிப்மர் நிர்வாகம், தனது தன்னிச்சையான அறிவிப்பை உடனடியாக திரும்ப பெறாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும்.சிந்தனையாளர் பேரவை தலைவர் செல்வம்: இப்பிரச்னையில் கவர்னர், முதல்வர் மற்றும் எம்.பி.,க்கள் தலையிட்டு தீர்வு காண வேண்டும் என, கூறியுள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X