மீனவர்கள் மோதல் வழக்கு: 30 பேருக்கு முன்ஜாமின்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
03:52

புதுச்சேரி-மீனவ கிராமத்திற்கு இடையே ஏற்பட்ட மோதல் வழக்கில், 30 பேர் முன்ஜாமின் பெற்றனர்.புதுச்சேரியில் சுருக்கு வலை பயன்படுத்தி மீன்பிடிப்பது தொடர்பாக வீராம்பட்டினம், நல்லவாடு மீனவர்களுக்கு இடையே கடந்த ஆக. 28ம் தேதி கடலுக்குள் மோதல் ஏற்பட்டது.நல்லவாடு மீனவர்களுக்கு ஆதரவாக வம்பாகீரப்பாளையம் மீனவர்கள் மோதலில் ஈடுபட்டனர். போலீசார் துப்பாக்கி சூடு நடத்தி, மோதலை தடுத்தனர். இதனை தொடர்ந்து 3 மீனவ கிராமங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.மோதல் சம்பவம் தொடர்பாக, அரியாங்குப்பம், தவளக்குப்பம், ஒதியஞ்சாலை போலீசார் 900 பேர் மீது, கொலை மிரட்டல், தாக்குதல், சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட 7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்தனர்.சபாநாயகர் செல்வம், அமைச்சர்கள் நமச்சிவாயம், லட்சுமிநாராயணன் தலைமையில் மீனவ பிரதி நிதிகளுடன் சமாதான பேச்சுவார்த்தை நடந்தது. உடன்பாடு ஏற்பட்டதால் 144 தடை உத்தரவு வாபஸ் பெறப்பட்டது. மீனவர்கள் மீண்டும் கடலுக்கு சென்று மீன்பிடித்து வருகின்றனர். வழக்கு பதிவு செய்யப்பட்ட 900 பேரில் ஒருவர் கூட கைது செய்யப்பட வில்லை. இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு பலர் புதுச்சேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதில் 30 பேருக்கு புதுச்சேரி கோர்ட் முன்ஜாமின் வழங்கியது. பலரது முன்ஜாமின் மனுக்கள் விசாரணையில் உள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X