ஏழை மக்கள் உயர் மருத்துவ சேவை பெற நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது | செய்திகள் | Dinamalar
ஏழை மக்கள் உயர் மருத்துவ சேவை பெற நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
03:53

புதுச்சேரி-'ஏழை மக்கள் உயர் சிறப்பு மருத்துவ சேவை பெறவே, நடைமுறை எளிமைப்படுத்தப்பட்டுள்ளது' என, ஜிப்மர் இயக்குனர் ராகேஷ் அகர்வால் விளக்கம் அளித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:ஜிப்மர் நிறுவனம் ஏழை மக்களின் உயர் சிறப்பு மருத்துவ சேவையை எளிமைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்ட சுற்றறிக்கையை பற்றி பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன.வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள அனைத்து ஏழை மக்களுக்கு உதவும் வகையில், அவர்களின் முதல் மருத்துவ பதிவின்போது குடும்ப அட்டையை மட்டும் எளிமையான அடையாளமாக ஏற்றுக் கொண்டு, மருத்துவ சேவை எவ்வித சிரமமும் இன்றி சிறந்த முறையில் கிடைத்திட வழி வகை செய்யும் நோக்கத்தில் இம்முறை செயல்படுத்தப்படுகிறது.ஏழை மக்களுக்கு ஜிப்மர் நிறுவனம் தொடர்ந்து இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க கடமைப்பட்டுள்ளது. ஜிப்மரில் அதி நவீன மற்றும் விலையுயர்ந்த சேவைகளை பெறுவதற்கு வறுமைக் கோட்டுக்குக் கீழே உள்ளவர் என, சான்றிதழ் வாங்குவதற்காக மிகுந்த இன்னலுக்கு உள்ளாகின்றனர்.நோயாளிகள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு கால விரயம் ஏற்படுகிறது. அவர்களின் மருத்துவ சேவையும் தள்ளி போக நேரிடுகிறது. தற்போது சிறப்பு சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நோயாளிகள் சான்றிதழுக்காக சிரமப்படுவதை தவிர்க்க இந்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகிறது.இவை பொது மக்களுக்கு சிறப்பு சிகிச்சைகள் கிடைக்க மேலும் உதவியாக இருக்கும். பெரும்பாலான வெளிப்புற நோயாளிகளின் சிகிச்சைகளும், அவர்களுக்கான மருந்துகள் மற்றும் சாதாரணஆய்வக மற்றும் ஊடுகதிர் பரிசோதனைகள் உட்பட அனைத்தும் தொடர்ந்து இலவசமாக கிடைக்கும்.இவ்வாறு செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X