சுகாதார குழுவுக்கு கவர்னர் பாராட்டு | செய்திகள் | Dinamalar
சுகாதார குழுவுக்கு கவர்னர் பாராட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
03:55

புதுச்சேரி-புதுச்சேரி மற்றும் ஆந்திராவில் 100 சதவீதம் தடுப்பூசி செலுத்தும் திட்டத்தின் ஒருபகுதியாக சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக சென்று தடுப்பூசி செலுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தி வருகின்றனர்.ஏனாம் ஆந்திர எல்லை கிராமங்களில் சுகாதார பணியாளர்கள் கையில் தடுப்பூசி வைத்துக்கொண்டு முதல் தவணை, இரண்டாம் தவணை தடுப்பூசி போட்டுக்கொள்ளுமாறு தெலுங்கு மொழியில் கூவி கூவி அழைத்து வருகின்றனர்.மூன்று செவிலியர்களை கொண்ட அந்த குழு, தெருவில் வியாபாரம் செய்பவர்களை போல தடுப்பூசி செலுத்தும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.செவிலியர்களின் இந்த வித்யாசமான விழிப்புணர்வு முயற்சி அனைத்து தரப்பு மக்களிடையே பாராட்டை பெற்றுள்ளது. இதனை டுவிட்டரில் பதிவிட்டுள்ள புதுச்சேரி கவர்னர் தமிழிசை, ஏனாம் சுகாதார குழுவிற்கு பாராட்டு என, தெரிவித்துள்ளார்.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X