702 'ஏசி' பஸ்கள் அக்., 1ல் இயக்கம்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 செப்
2021
04:01
பதிவு செய்த நாள்
செப் 25,2021 04:00

சென்னை--அக்டோபர் முதல், தமிழகத்தில் 'ஏசி' பஸ்களை இயக்க அரசு அனுமதி அளித்துள்ளது.


போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அறிக்கை:கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மே 10 முதல் மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களுக்கு இடையே, 'ஏசி' பஸ்கள் இயக்க தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தாக்கம் குறைந்துள்ளதால், சமூக இடைவெளி உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகளை பின்பற்றி, மீண்டும் 'ஏசி' பஸ்களை இயக்க, முதல்வர் அனுமதி அளித்துள்ளார்.



இதன்படி, சென்னை மாநகர போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் 48 பஸ்கள்; அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில், இருக்கை வசதியுள்ள 100 பஸ்கள்; படுக்கை வசதியுள்ள 34 பஸ்கள்; இருக்கை மற்றும் படுக்கை வசதியுள்ள 206 பஸ்கள் என, மொத்தம் 340 பஸ்கள் இயக்கப்பட உள்ளன.மேலும், விழுப்புரம், சேலம், கோவை, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி போக்குவரத்துக் கழகங்களின் சார்பில், 314 பஸ்கள் உட்பட மொத்தம் 702 குளிர்சாதன பஸ்கள் இயக்கப்பட உள்ளன.


கடந்த ஐந்து மாதங்களாக இயக்கப்படாமல் இருந்த பஸ்கள் நன்கு பராமரிக்கப்பட்டு, கொரோனா தொற்று பரவாத வகையில் கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டுள்ளன. என்றாலும், பயணியர் முக கவசம் அணிந்து, கிருமி நாசினியால் கைகளை சுத்தம் செய்து, பாதுகாப்பான பயணத்தை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement
மேலும் புதுச்சேரி செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (9)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
25-செப்-202117:58:18 IST Report Abuse
INDIAN Kumar அரசு பாதி தனியார் மீதி இது தான் சரியான தேர்வு மற்றும் போட்டி
Rate this:
Cancel
M S RAGHUNATHAN - chennai,இந்தியா
25-செப்-202108:56:48 IST Report Abuse
M S RAGHUNATHAN December 31 அன்று பேரிச்சம் பழம் வாங்கி போக்குவரத்து துறை புத்தாண்டை கொண்டாடும்.
Rate this:
Cancel
duruvasar - indraprastham,இந்தியா
25-செப்-202108:16:10 IST Report Abuse
duruvasar "இருக்கை " வசதியோடுள்ள அரசு பஸ்களை அரசு இயக்க முன்வந்திருப்பது வரவேற்க்கப் வேண்டிய விஷயம். 4 மாதத்தில் 700 ஏசி பஸ்கள். உண்மையிலேயே மிகவிரைவாக செயல்படும் விடியல் ஆட்சி என்றால் அது மிகையாகாது ‌.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X