பால் விற்பனை நிலையத்தில் நுாதன முறையில் பணம் திருட்டு | கடலூர் செய்திகள் | Dinamalar
பால் விற்பனை நிலையத்தில் நுாதன முறையில் பணம் திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
04:27

பெண்ணாடம்-பெண்ணாடத்தில் தனியார் பால் விற்பனை நிலையத்தில், பால் வாங்குவது போன்று முதியவரிடம் பணம் கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.கடலுார் மாவட்டம், பெண்ணாடம், மன்னார் நகரைச் சேர்ந்தவர் மூர்த்தி, 44; இவர், கிழக்கு மெயின்ரோடு பகுதியில் தனியார் பால் விற்பனை நிலையம் வைத்துள்ளார். நேற்று முன்தினம் அதிகாலை மூர்த்தி கடைகளுக்கு பால் விற்பனைக்கு சென்றார். அவரது தந்தை பரமசிவம், 70; கடையில் இருந்தார். காலை 7:45 மணியளவில் புல்லட்டில் வந்த இருவரில் ஒருவர் 30 பாக்கெட் தயிர், 25 பாக்கெட் பால் வேண்டும் என பரமசிவத்திடம் கேட்டார். பால் எடுத்து விட்டு, திரும்பி பார்த்த போது அவரை காணவில்லை. மேஜையின் உள்ளே வைத்திருந்த ரூ. 36 ஆயிரத்தையும் காணவில்லை. மர்ம நபர்களை பெண்ணாடம் போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் பெண்ணாடம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X