கிரைம் செய்திகள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
04:27

ஹான்ஸ் வைத்திருந்தவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் ஆலடி சாலையில் போதை பொருள் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் ரேவதி தலைமையிலான போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.

அப்போது, அவ்வழியாக பைக்கில் மூட்டையுடன் வந்தவரை போலீசார் சோதனை செய்தனர். அதில், ஜங்ஷன் சாலை கண்ணாராம், 52; விருத்தாசலம் பகுதியில் கடைகளுக்கு விநியோகம் செய்ய ரூ.25 ஆயிரம் மதிப்பிலான, 50 பண்டல்கள் ஹான்ஸ் பாக்கெட்டுகள் வைத்திருந்தார். விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, கண்ணாராமை கைது செய்தனர்.

தீவிபத்தில் ரூ. 2லட்சம் பொருட்கள் சேதம்

சேத்தியாத்தோப்பு: சேத்தியாத்தோப்பு அடுத்த ஒரத்துாரில் பஸ்நிறுத்தம் அருகே உள்ள மதுராந்தக நல்லுாரைச் சேர்ந்த ஆசைக்குமார் நடத்தி வரும் ஓட்டலில் நேற்று முன்தினம் இரவு 12.30 மணியளவில் மர்மான திடீரென தீப்பிடித்து எரிந்தது. சேத்தியாத்தோப்பு தீயணைப்பு நிலைய வீரர்கள் தீயை அணைத்தனர். இருந்தும் ஓட்டல், அருகிலிருந்த கிளியனுார் ராஜேஷ் டீ கடை, ராஜேந்திரன் மளிகை கடைகளுக்கும் பரவி ஓட்டல், மளிகை கடைகளில் இருந்த ரூ 2 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சாம்பலாகின. புகாரின் பேரில் ஒரத்துார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.

வி.ஏ.ஓ.,வை தாக்கியவர் கைது

புவனகிரி: கீழ்புவனகிரி வி.ஏ.ஒ., அலுவலகம் முன் தம்பிக்குநல்லாண்பட்டினம் சிலம்பரசன்,30; மற்றும் இருவர் மதுக்குடித்தனர். மூவரும் அளவுக்கு அதிகமாக சத்தமிட்டதால், அதேப்பகுதியைச் சேர்ந்த வி.ஏ.ஓ., ரமேஷ்,26; தட்டிக் கேட்டார்.

இதில் ஆவேசமடைந்த மூவரும் அவரை திட்டி, கையால் தாக்கி பணி செய்ய விடாமல் தடுத்தனர். புகாரின் பேரில் புவனகிரி போலீசார் வழக்குப் பதிந்து சிலம்பரசனை கைது செய்து, தலைமறைவாக உள்ள இருவரை தேடி வருகின்றனர்.

மணல் கடத்திய 3 பேர் கைது

வேப்பூர் : வேப்பூர் சப் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

வேப்பூர் அடுத்த நல்லுார் மணிமுக்தாற்றில் இருந்து அனுமதியின்றி மணல் கடத்திய நல்லுாரைச் சேர்ந்த பெரியசாமி, 45; செல்லவேல், 39; ஆறுமுகம், 65; ஆகியோரை கைது செய்து மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.

மது விற்றவர் மீது வழக்கு

புவனகிரி: புவனகிரி போலீசார் நேற்று முன் தினம் ரோந்துபணியில் ஈடுபட்டனர். கீழ் குறியாமங்கலம் டாஸ்மாக்கடை அருகில் கூடுதல் விலைக்கு மதுபாட்டில் விற்ற கீழ் குறியாமங்கலம் மெயின்ரோட்டுத் தெரு ஆதிமூலம்,63; மீது வழக்குப் பதிந்து இரண்டு குவாட்டர் பாட்டிலை பறிமுதல் செய்தனர்.

இடையூறு செய்த இருவர் மீது வழக்கு

புவனகிரி: புவனகிரி போலீசார் நேற்று முன் தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சாத்தப்பாடி மேட்டுத்தெரு திவாகரன்,30; தட்சிணாமூர்த்தி ஆகியோர் வீட்டு வாசல் முன் முன் விரோதத்தில் ஆபாசமாக திட்டிக் கொண்டு சண்டையிட்டனர். இது குறித்து போலீசார் வழக்குப் பதிந்துள்ளனர்.

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

விருத்தாசலம்: விருத்தாசலம் சப் இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையிலான போலீசார் நேற்று விளாங்காட்டூர் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, படுகாளநத்தம் பகுதியைச் சேர்ந்த சதீஷ், 23; வேப்பூர் அடுத்த சித்தலுார் அஜித், 20, ஆகியோர் கஞ்சா வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதுகுறித்து விருத்தாசலம் போலீசார் வழக்குப் பதிந்து, சதீஷ், அஜித் ஆகிய இருவரையும் கைது செய்து, 800 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

மகள் மாயம்: தந்தை புகாா்

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் அடுத்த பழஞ்சநல்லுார் கீழக்கு தெரு நாகராஜன், 40; விவசாய கூலித்தொழிலாளி. இவரது மகள் நவீனா, 19; இவர் அதே ஊரில் உள்ள தனியார் கல்லுாரியில் பி.பி.ஏ., மூன்றாம் ஆண்டு படித்தார். இவரும் மடப்புரத்தைச் சேர்ந்த டிரைவர் மணிமாறன் என்பவரும் காதலித்தனர். இதற்கு நவீனாவின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

நேற்று முன்தினம் காலை கல்லுாரிக்கு சென்ற மகள் திரும்பி வரவில்லை. விசாரணையில் காதலன் மணிமாறன், அழைத்துச் சென்றது தெரிந்தது. புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து கல்லுாரி மாணவியை தேடி வருகின்றனர்.

கொத்தனாரை வெட்டியவர் கைது

காட்டுமன்னார்கோவில்: காட்டுமன்னார்கோவில் சந்தைத்தோப்பைச் சேர்ந்தவர் ரவி, 55; கூலித்தொழிலாளி. இவரது மனைவி தனலட்சுமி, 50; இவரது பக்கத்து வீட்டைச் சேர்ந்த சங்கர்,39; இருவருக்கும் இடப்பிரச்னையில் முன்விரோதம் இருந்தது.

நேற்று முன்தினம் புவனகிரி அடுத்த கீழமணக்குடியில் கொத்தனாராக உள்ள ரவி மகன் விஜயன், 29; ஊருக்கு வந்தார். அப்போது சங்கர், அவரது மனைவி விஜயா சேர்ந்து தகராறு செய்து கத்தியால் ரவியை வெட்டினர். இதை தடுத்த விஜயன் பலத்த காயமடைந்து சிதம்பரம் ராஜாமுத்தையா மருத்துவக் கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். புகாரின் பேரில் காட்டுமன்னார்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து சங்கரை கைது செய்தனர்.

தாக்கிய சகோதரர்கள் கைது

குள்ளஞ்சாவடி: குள்ளஞ்சாவடி அடுத்த தீர்த்தனகிரியை சேர்ந்தவர் சூர்யா, 33; இவர் நேற்று குள்ளஞ்சாவடி பகுதியில் சென்ற போது, அவரை இரண்டு பேர் வழிமறித்து தாக்கினர்.

இதில் காயமடைந்த சூர்யா, சம்பவம் குறித்து குள்ளஞ்சாவடி போலீசில் புகார் அளித்தார். சமட்டிக்குப்பம் பகுதியை சேர்ந்த ராமலிங்கம் மகன்கள் ராஜாராம், 30; ராமஜெயம், 28; ஆகியோரை கைது செய்தனர். பணம் கொடுக்கல், வாங்கல் தகராறில் தாக்கியதாக போலீசார் தெரிவித்தனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X