ஸ்ரீமுஷ்ணம் -ஸ்ரீமுஷ்ணம் பத்மநாபன் உரக்கடை, ஸ்பிக் கிரீன் ஸ்டார் உர நிறுவனம் சார்பில் நெல் மற்றும் கரும்பு விவசாயிகளுக்கான தொழில் நுட்ப பயிற்சி முகாம் மற்றும் கருத்தரங்கம் நடந்தது.கருத்தரங்கிற்கு ஸ்பிக் நிறுவன மாநில விற்பனை மேலாளர் அடைக்கலம் தலைமை தாங்கினார். பத்மநாபன் உரக்கடை உரிமையாளர் பிரகாஷ் முன்னிலை வகித்தார். விற்பனை விரிவாக்க அலுவலர் அருள்தேவன் வரவேற்றார். முதுநிலை மேலாளர் பாஸ்கரன், விழுப்புரம் மண்டல மேலாளர் முத்துக்கண்ணன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். தொழில்நுட்ப ஆலோசகர் தியாகராஜன், ஸ்ரீமுஷ்ணம் வேளாண் துணை இயக்குனர் ஆறுமுகம், விருத்தாசலம் வேளாண் அறிவியல் நிலைய உழவியல் துறை இணை பேராசிரியர் பாஸ்கரன் ஆகியோர் தொழில் நுட்ப ஆலோசனை வழங்கினர். ஸ்ரீமுஷ்ணம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் இருந்து விவசாயிகள் பங்கேற்றனர். ஜானகி வெங்கடேசன் நன்றி கூறினார்.