பழக்கடையில் திடீர் தீ விபத்து | கடலூர் செய்திகள் | Dinamalar
பழக்கடையில் திடீர் தீ விபத்து
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
04:28

ஸ்ரீமுஷ்ணம் -ஸ்ரீமுஷ்ணம் கடைவீதியில் உள்ள பழக்கடையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் கடைவீதி காந்தி சிலை அருகே பழக்கடை நடத்தி வருபவர் பாண்டியன், 47; இவரது கடையின் பின்புறம் பழங்கள் வந்த அட்டைப்பெட்டிகளை அடுக்கி வைத்திருந்தார். நேற்று மதியம் அட்டைப்பெட்டிகள் இருந்த பகுதியில் தீப்பிடித்து எரிந்தது. தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் (பொறுப்பு) வீரசேகர் தலைமையிலான வீரர்கள் வந்து அருகிலிருந்த கடைகளுக்கு தீ பரவாமல் தடுத்து தீயை அணைத்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தீவிபத்து குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X