பஸ்சில் கடத்த முயன்ற 1 கிலோ கஞ்சா பறிமுதல் | கடலூர் செய்திகள் | Dinamalar
பஸ்சில் கடத்த முயன்ற 1 கிலோ கஞ்சா பறிமுதல்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
04:29

கடலுார்-கடலுாரில், அரசு பஸ்சில் கடத்த முயன்ற 1 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.கடலுார் மஞ்சக்குப்பம் ஆல்பேட்டை செக்போஸ்டில் நேற்று முன்தினம் நள்ளிரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். நள்ளிரவு சென்னையிலிருந்து கும்பகோணம் சென்ற அரசு பஸ்சை நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது, வாலிபர் ஒருவர் பஸ்சில் இருந்து இறங்கி ஓடினார். அவர் அமர்ந்திருந்த இடத்தின் அருகே இருந்த பையை சோதனை செய்தனர். அதில், 1 கிலோ கஞ்சா இருந்தது. கடலுார் புதுநகர் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வந்து பையை ஒப்படைத்தனர். பறிமுதல் செய்த கஞ்சாவின் மதிப்பு ரூ. 1 லட்சம் ஆகும். கடலுார் புதுநகர் போலீசார் வழக்கு பதிந்து, தப்பிச்சென்ற வாலிபரை தேடி வருகின்றனர்.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X