மியாட் இருதயவியல் சிகிச்சை நிபுணர் நாளை 26ம் தேதி கடலுாருக்கு வருகை | கடலூர் செய்திகள் | Dinamalar
மியாட் இருதயவியல் சிகிச்சை நிபுணர் நாளை 26ம் தேதி கடலுாருக்கு வருகை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
04:32

கடலுார்-சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இருதயவியல் சிகிச்சை சிறப்பு நிபுணர் நாளை 26 ம்தேதி கடலுாருக்கு வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார்.சென்னை மியாட் மருத்துவமனை சார்பில், இருதயவியல் மற்றும் மின் இயற்பியல் துறை இயக்குனர் ஜெய்சங்கர், நாளை 26 ம்தேதி கடலுாருக்கு காலை 9 மணி மதியம் 2 மணி வரை வருகை தந்து ஆலோசனை வழங்க உள்ளார். இந்த ஆலோசனை முகாம்,கடலுாரில் ஆற்காட் மருத்துவமனை, எண்: 30, 31, ஏ.எல்.சி. வளாகம், கடலுார் என்ற முகவரியில் நடக்கிறது.முகாமில் மார்பு வலி அல்லது அசவுகரியம், வியர்த்தல், சோர்வு, உணர்வின்மை, தலைச்சுற்றல், கை, கால், தாடைகளில் அதிகரிக்கும் வலி, கால்களில் வீக்கம், படபடப்பு, சுவாசிப்பதில் சிரமம், இதய நோய், திடீர் இதய நோய் மரணங்கள் ஏற்பட்ட குடும்ப வரலாறு, நீரிழிவு நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்கள் ஆலோசனை பெறலாம்.மேலும் ஆஞ்சியோகிராம், ஆஞ்சியோபிளாஸ்டிக் ஸ்டெண்டிங், பைபாஸ் அறுவை சிகிச்சை, இதய மாற்று அறுவை சிகிச்சை, பேஸ்மேக்கர்கள், இதய வால்பு பழுது மற்றும் மாற்றம் செய்து கொண்டவர்களும், இரண்டாவது கருத்து அல்லது வழக்கமான இதய சோதனைக்கும் முகாமில் பங்கேற்கலாம். முந்தைய மருத்துவ பதிவுகள் ஏதேனும் இருந்தால் அவசியம் கொண்டு வரவேண்டும். முகாமிற்கு வர முன் பதிவு அவசியம். ஆலோசனை கட்டணம் ரூ. 200. முன்பதிவுக்கு 78240-60011, 98412-68500 எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X