நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கு தம்பதி உட்பட 7 பேர் மீது வழக்கு  | கடலூர் செய்திகள் | Dinamalar
நிதி நிறுவன ஊழியர்கள் தாக்கு தம்பதி உட்பட 7 பேர் மீது வழக்கு 
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
04:32

வடலுார்-தனியார் நிதி நிறுவன ஊழியர்களை தாக்கிய தம்பதி உட்பட 7 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.வடலுார் அடுத்த ஆயிக்குப்பம் கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் டில்லிராஜா. வடலுாரில் தனியார் நிதி நிறுவன ஊழியர். இவரது நிறுவனத்தில் அரங்கமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த இளங்கோ மகன் ராஜன் கடன் வாங்கினார். நேற்று முன்தினம் காலை டில்லி ராஜா பணம் வசூல் செய்ய ராஜன் வீட்டிற்கு சென்ற போது தகராறு ஏற்பட்டது.ஆத்திரமடைந்த ராஜன், அவரது மனைவி கலையரசி, தாயார் கிருஷ்ணவேணி உட்பட 7 பேர் நிதி நிறுவனத்திற்கு சென்று, டில்லி ராஜா மற்றும் அங்கு பணி புரியும் பின்னலுார் கிராமம் செல்வமுருகன் ஆகியோரை தாக்கினர். வடலுார் போலீசார் வழக்குப் பதிந்து ராஜன், கலையரசி உள்ளிட்ட 7 பேரைதேடி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கடலூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X