சீமைக்கருவேல மரங்களால் மழை நீரை சேமிக்க முடியல ஒன்றிய கவுன்சிலர்கள் புகார்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
04:37


காரியாபட்டி : ''கண்மாயில் மழைநீரை சேமிக்க முடியாமல் போவதற்கு அங்கு வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களே காரணமென,'' ஒன்றிய கவுன்சிலர் ஜமுனாராணி புகார் தெரிவித்தார்.காரியாபட்டி ஒன்றிய கவுன்சிலர்கள் கூட்டம் தலைவர் முத்துமாரி தலைமையில் பி.டி.ஓ.,கள் ராஜசேகரன், சிவக்குமார் முன்னிலையில் நடந்தது.



கவுன்சிலர்கள் விவாதம்:திருச்செல்வம் (அ.தி.மு.க.,): ஒன்றியத்துக்கு சொந்தமான கண்மாய்களின் நிலை என்னவாக இருக்கிறது என்பது தெரியாது. ஆனால் இருக்கிற கண்மாய்களை துார்வார வேண்டும். தற்போது மழைக்காலம் என்பதால் மழை நீரை சேமித்து ஒன்றியத்துக்கு வருவாய் ஏற்படுத்தும் வகையில் மீன்கள் வளர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.பி.டி.ஓ.,: 137 கண்மாய்களில் பெரும்பாலான கண்மாய்கள் துார்வார பட்டு விட்டன. மீதமுள்ள கண்மாய்கள்துார்வார நடவடிக்கை எடுக்கப்படும். மீன்கள் வளர்க்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.நாகர் பாண்டீஸ்வரி (அ.தி.மு.க.,): ராம்கி நிறுவனத்தால் ஏராளமான பாதிப்புகளை அப்பகுதி மக்கள் சந்தித்து வருகிறோம்.



மினரல் பிளான்ட் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். சேதமடைந்துள்ள சமுதாய கூடங்களை சீரமைக்க வேண்டும்.பி.டி.ஓ.,: மினரல் பிளான்ட் அமைக்க திட்டம் தயார் செய்து ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளோம். மற்ற பணிகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து நடவடிக்கை எடுக்கப்படும்.ஜமுனாராணி, (தி.மு.க.,): வரலொட்டி கண்மாயில் சீமைக்கருவேல மரங்கள் அடர்ந்து வளர்ந்துள்ளன. மழைநீர் தேங்கினாலும் விரைவில் உறிஞ்சப்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் அங்கு வளர்ந்துள்ள சீமை கருவேல மரங்களே. இவற்றை அகற்றினால் மட்டுமே தண்ணீரை சேமித்து இருப்பு வைக்க முடியும்.பி.டி.ஓ.,: ஒன்றிய கண்மாயாக இருந்தால் சீமைக்கருவேலமரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.



முருகன் ( அ. தி .மு.க.,): ஆத்திகுளம், அல்லாளப்பேரியில் மயான கொட்டகை வேண்டும். கழுவனச்சேரி அரசு பள்ளிக்கு செல்ல பாதை இல்லை.நாகர் பாண்டீஸ்வரி (அ.தி.மு.க.,): கவுன்சிலர்களுக்கான அதிகாரம் என்னென்ன...எதில் தலையிடலாம்... தலையிடக் கூடாது என்பதற்கான கையேடு வழங்க வேண்டும்.பி.டி.ஓ.,:10 நாட்களுக்குள் கையேடு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு விவாதம் நடந்தது.

 

Advertisement
மேலும் விருதுநகர் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X