பரமக்குடி கோயில் வீதி சீரமைப்பு | ராமநாதபுரம் செய்திகள் | Dinamalar
பரமக்குடி கோயில் வீதி சீரமைப்பு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
04:54

பரமக்குடி : பரமக்குடி முத்தாலம்மன் கோயில் தொடங்கி, அங்காளம்மன் கோயில் வரை தெருவோர கடைகள் ஆக்கிரமிப்பு குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்திகள் வெளியாகின.



இந்நிலையில் நகராட்சி அதிகாரிகள் கடைகளை ஒழுங்கு படுத்தி உள்ளனர்.பரமக்குடி மீனாட்சி அம்மன் கோயில் அருகில் காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. அங்காளம்மன் கோயில் தொடங்கி, முத்தாலம்மன் கோயில் வரை உள்ள தெருக்களில் தெருவோர வியாபாரிகள் ஆக்கிரமித்துள்ளனர்.இதனால் ஏற்பட்ட நெரிசல் குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது.இதனையடுத்து பரமக்குடி ஆணையாளர் (பொறுப்பு) அய்யனார் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு இரண்டு ஓரங்களிலும் குறிப்பிட்ட இடத்திற்குள் மட்டும் வியாபாரம் செய்ய அனுமதி கொடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.



இந்நிலையில் அனைத்து டூவீலர் களையும் கோயில் முன் நிறுத்தி வைப்பதால் மீண்டும் நெரிசலுக்கு வழிவகுத்துள்ளது. போக்குவரத்து போலீசார் உள்ளிட்ட அதிகாரிகள் இதன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் ராமநாதபுரம் மாவட்ட  செய்திகள் :
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X