3வது வாரமாக நாளைமெகா தடுப்பூசி முகாம் | திண்டுக்கல் செய்திகள் | Dinamalar
3வது வாரமாக நாளைமெகா தடுப்பூசி முகாம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
05:17

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் தொடர்ந்து 3வது வாரமாக நாளை (செப்.26) மெகா தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது.கொரோனா பரவலை தடுக்க அரசு பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.



கடந்த 2 வாரங்களாக ஞாயிற்றுக்கிழமை சிறப்பு முகாம் நடத்தி, ஒரே நாளில் லட்சக்கணக்கான மக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. திண்டுக்கல்லில் செப்.12 ல் 72 ஆயிரத்து 459 பேருக்கு, செப்.19 ல் 30 ஆயிரத்து 124 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.தொடர்ந்து 3 வது வாரமாக நாளையும் (செப்.26) திண்டுக்கல்லில் 644, பழநியில் 416 மொத்தம் ஆயிரத்து 60 இடங்களில் தடுப்பூசி முகாம் நடக்க உள்ளது. அதில் 80 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட திட்டமிட்டுள்ளனர். இதற்காக நேற்று (செப்.24) 30 ஆயிரம் டோஸ் தடுப்பூசி வந்தது. இன்றும் வருகிறது.தடுப்பூசி செலுத்த விருப்பமுள்ளவர்கள் ஆதார், பான் எண், ஓட்டுநர் உரிமம், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டையை காண்பித்து போட்டு கொள்ளலாம். இதுவரை 12.48 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement
மேலும் திண்டுக்கல் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X