குறிச்சி குளத்தின் கரையில் இரவில் ஆபத்து: விளக்கும் எரியலை; வேலையும் நடக்கலை! கும்மிருட்டால் விபத்துக்கு அதிக வாய்ப்பு!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 செப்
2021
05:19
பதிவு செய்த நாள்
செப் 25,2021 05:17

கோவை குறிச்சி குளத்தின் கரையில், இரவில் கடும் இருட்டாக இருப்பதால், பாதசாரிகளும், வாகனங்களும் விபத்துக்குள்ளாகும் வாய்ப்பு அதிகமாகியுள்ளது.கோவை-பொள்ளாச்சி ரோட்டிலுள்ள குறிச்சி குளம், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் மாநகராட்சி நிர்வாகத்தால் மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதற்காக அதன் கரைப்பகுதியும் அகலமாக்கப்பட்டு, அதன் மீது நடைபாதை, சைக்கிள் பாதை போன்றவை அமைக்கும் பணி நடந்து வருகிறது.



இதில் குறிச்சி பிரிவிலிருந்து சுந்தராபுரம் நோக்கிச் செல்லும் ரோட்டில், ஒரு கி.மீ., துாரத்துக்கு, கரைப்பகுதியில் நிறைய பணிகள் நடக்கின்றன.ஆனால் இந்த கரையை ஒட்டியுள்ள ரோடு அகலமாக்கப்படவில்லை. ஒரு புறத்தில், மேம்பாட்டுப் பணியால் ரோடு மேலும் குறுகலாகியுள்ளது. முன்பு அங்கு வாகனங்கள் ஒதுங்குவதற்கு இடம் இருந்தது.இப்போது அந்த இடங்கள் மேடாக்கப்பட்டு, கான்கிரீட் தளம் போடப்பட்டுள்ளதால், வாகனங்கள் ஒதுங்கவும் இடமில்லை. மறுபுறத்தில் மண் ரோடாக இருப்பதோடு, அங்கு கடைகள் ஆக்கிரமிப்பு அதிகமாகவுள்ளது.



அந்த பகுதியில் ரோட்டுக்கும், மண் தரைக்கும் உயர வித்தியாசம் இருப்பதால் நிறைய வாகனங்கள் விபத்துக்கு உள்ளாகி வருகின்றன. பொங்காளியம்மன் கோவில் அருகில் ஒரு புறம் கோவிலும், மற்றொரு புறம் பெரிய ஆலமரமும் இருப்பதால், அந்த இடத்தில் ரோடு மிகவும் குறுகலாகவுள்ளது. இப்படியாக குறிச்சி குளக்கரையில் விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்புமிக அதிகமாகவுள்ளது.குறிச்சி குளத்தை மேம்படுத்தும் பணியைத் துவக்குவதற்கு முன்பே, குளத்தின் கிழக்குக்கரைப் பகுதியில் உள்ள ரோட்டை அகலப்படுத்தியிருக்க வேண்டும். ஆனால் தேசிய நெடுஞ்சாலைத்துறை இதற்காக எந்த முயற்சியும் இதுவரை எடுக்கவில்லை.



இதற்கு பொள்ளாச்சி எம்.பி.,யும், கோவை எம்.பி.,யும் சேர்ந்து குரல் கொடுத்து, சிறப்பு நிதி வாங்கி, இந்த இடத்தில் ரோட்டை அகலப்படுத்த நடவடிக்கை எடுப்பது அவசியம்.அது மட்டுமின்றி, குறிச்சி குளம் மேம்படுத்தப்பட்ட பின்பு, அங்கு வரும் வாகனங்களுக்கு 'பார்க்கிங்' இடத்தை ஒதுக்குவதிலும் பிரச்னை உள்ளது. ரோட்டில் செல்லும் வாகனப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையிலும், விபத்து நடக்காத வகையிலும் 'பார்க்கிங்' பகுதியைத் திட்டமிடுவது கட்டாயமாகும்.



இவை அனைத்தும் மாநகராட்சி மற்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை இணைந்து எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்.இப்போது குறிச்சி குளத்தில் நடந்து வரும் பணிகளின் பொருட்டு, அந்தக் கரையில் இருந்த விளக்குகள் அனைத்தும் அகற்றப்பட்டுள்ளன. அதனால் அந்தப் பகுதி கடும் இருட்டாகவுள்ளது. பாதசாரிகள் கடப்பதே தெரியவில்லை.


ஏற்கனவே குறுகலான ரோடு, உயர வித்தியாசம், கோவில், மரம் என விபத்துக்கான காரணிகள் அதிகமிருக்கும் நிலையில், இப்போது விளக்குகளும் எரியாததால் இரவு நேரத்தில் இங்கு விபத்துகள் நடப்பதற்கான வாய்ப்பு இன்னும் அதிகமாகியுள்ளது.


குளத்தை மேம்படுத்தும் பணியும், மந்த கதியில் நடப்பதால் இன்னும் எத்தனை மாதங்களுக்கு இந்த ஆபத்து தொடருமென்பது தெரியவில்லை.இவற்றை எல்லாம் கருத்தில் கொண்டு, சாலை பாதுகாப்புக்குழுக் கூட்டத்தில் இதுபற்றி விவாதித்து, உடனடியாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது மாவட்ட நிர்வாகத்தின் பொறுப்பாகும்.-நமது நிருபர்-

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X