கொன்னை வெள்ளையன்... மரகத அழகி... நீல வரியன்... பட்டாம்பூச்சி 'வாக்'கில் சிக்கிய 20 சிற்றினங்கள்
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
05:24

மதுரை : மதுரையில் நடந்த பட்டாம்பூச்சி 'வாக்' நிகழ்ச்சியில் மரகத அழகி, கொன்னை வெள்ளையன், நீல வரியன், சிவப்பு மடல் அழகி உள்ளிட்ட 20 வகை சிற்றின பட்டாம்பூச்சிகள் கண்டுபிடிக்கப்பட்டன.



வெள்ளைச்சாமி நாடார் கல்லுாரியில் விலங்கியல் துறை சார்பில் நடந்த இந்நிகழ்வை முதல்வர் (பொறுப்பு) ராஜேஸ்வர பழனிச்சாமி துவக்கி வைத்தார். துறை பேராசிரியர் லதா வரவேற்றார்.அமெரிக்கன் கல்லுாரி பேராசிரியர் ராஜேஷ் பேசுகையில், “ஒரு காட்டில் பட்டாம்பூச்சிகளின் வரத்தும், அதன் பெருக்கமும் அதிகமாக இருந்தால் அந்த இடம் வளமானதாக இருக்கும். தாவரங்களின் மகரந்த சேர்க்கைக்கு உதவும். வாழ்விடம் அழிப்பு, பூச்சிக்கொல்லி மருந்து பயன்பாடு உள்ளிட்ட பிரச்னைகளால் பட்டாம்பூச்சிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது என்றார்.



வளாகத்திலுள்ள பட்டாம்பூச்சிகள் கணக்கிடப்பட்டன. மரகத அழகி, சிவப்பு மடல் அழகி, கறிவேப்பிலை அழகி, வெண் சிறகன், சுற்றும் வெள்ளையன், கொன்னை வெள்ளையன், நீல வரியன், வெந்தய வரியன், ஆரஞ்சு வரியன், வெண்புள்ளி கருப்பன், அந்தி சிறகன், செவ்வந்தி சிறகன், சாம்பல் வசீகரன், மஞ்சள் வசீகரன், பழுப்பு வசீகரன், புல் மஞ்சள் உட்பட 20க்கும் மேற்பட்ட சிற்றினங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பேராசிரியை மலர் ஏற்பாடுகளை செய்தார். பேராசிரியர் முரளி நன்றி கூறினார்.

 

Advertisement
மேலும் மதுரை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X