கிரெடிட் கார்டிலிருந்து ரூ.30 ஆயிரம் 'ஆட்டை' | சென்னை செய்திகள் | Dinamalar
கிரெடிட் கார்டிலிருந்து ரூ.30 ஆயிரம் 'ஆட்டை'
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
06:28

ஐஸ்ஹவுஸ் : கொசு மருந்து தெளிக்கும் ஊழியரின் கிரெடிட் கார்டிலிருந்து, 30 ஆயிரம் ரூபாயை திருடிய மர்ம நபரை, போலீசார் தேடி வருகின்றனர்.



ராயப்பேட்டை யானைக்குளம் 6வது தெருவைச் சேர்ந்தவர் ராஜ முகமது, 48. அவர் தனியார் நிறுவனத்தில் கொசு மருந்து தெளிக்கும் ஊழியராக பணிபுரிகிறார். சமீபத்தில் இவர், எஸ்.பி.ஐ., வங்கியில், தனிநபர் கடன் வேண்டி 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்து இருந்தார்.



இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை அவரது மொபைல் போனில் தொடர்பு கொண்டு பேசிய மர்ம நபர், உங்களது மொபைல் எண்ணிற்கு வரும் ஓ.டி.பி., எண்ணை தெரிவித்த உடன், நீங்கள் கேட்ட கடன் தொகை உங்கள் வங்கிக் கணக்கில் கிரெடிட் ஆகும் எனக் கூறியுள்ளார்.



மர்ம நபரின் பேச்சை நம்பி, இவரும் ஓ.டி.பி., எண்ணை கூறியுள்ளார். சிறிது நேரத்தில் கிரெடிட் கார்டிலிருந்து, 30 ஆயிரம் ரூபாய் பயன்படுத்தி உள்ளதாக, குறுஞ்செய்தி வந்துள்ளது.அதன் பின்னரே தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த ராஜ முகமது, ஐஸ்ஹவுஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X