தாம்பரத்தில் கல்லுாரி மாணவியை கொலை செய்தவர் சிறையில் அடைப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
06:30

தாம்பரம் : தாம்பரம் ரயில் நிலைய வளாகத்தில், கல்லுாரி மாணவியை குத்தி கொலை செய்த நபரை, போலீசார் நேற்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி பின் சிறையில் அடைத்தனர்.



தாம்பரம் அடுத்த குரோம்பேட்டை பாரதிபுரம், ரவி நகரைச் சேர்ந்தவர் மதியழகன், 50; மாநகர போக்குவரத்து கழக ஓட்டுனர். இவரது மகள் ஸ்வேதா, 19; தனியார் கல்லுாரி மாணவி. நேற்று மதியம் 1:30 மணிக்கு, கிழக்கு தாம்பரம், ரயில் நிலைய நுழைவாயிலில், ரயில்வே குடியிருப்பு அருகே, நாகப்பட்டினத்தைச் சேர்ந்த, ராமச்சந்திரன், 24 என்பவர், ஸ்வேதாவை, கத்தியால் குத்தி கொலை செய்தார்.



பின், தன் கழுத்தையும், அறுத்து தற்கொலைக்கு முயன்றார். இது குறித்து, சேலையூர் போலீசார் விசாரித்ததில், காதல் விவகாரத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால், ராமச்சந்திரன், ஸ்வேதாவை கொலை செய்தது தெரிய வந்தது. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், ஸ்வேதாவின் உடல் பிரேத பரிசோதனை முடிந்து, அவரது, பெற்றோரிடம் நேற்று ஒப்படைக்கப்பட்டது. பிரேத பரிசோதனை முடிவின் படி, கழுத்து, நெஞ்சு, இடுப்பு உட்பட, ஆறு இடங்களில் ஸ்வேதாவிற்கு, கத்திக்குத்து விழுந்ததுடன், கழுத்தில் ஆழமாக குத்து விழுந்து மூளைக்கும், இதயத்திற்கும் செல்லும் ரத்த குழாய் துண்டிக்கப்பட்டு, ரத்த போக்கு ஏற்பட்டதே, அவர் உயிரிழக்க காரணம் என, போலீசார் தெரிவித்து உள்ளனர்.



ஸ்வேதாவின் உடல் ஒப்படைக்கப்பட்ட, அதே நேரம், ராமச்சந்திரனும் சிகிச்சை பெற, மருத்துவமனைக்கு வந்ததால், மருத்துவமனை வளாகத்தில், 50க்கும் மேற்பட்ட, போலீசார் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டனர். பின், ராமச்சந்திரன் உடல்நிலை நன்றாக உள்ளதாக, டாக்டர்கள் கூறியதால், மதியம், 2:30 மணிக்கு, மேல் விசாரணைக்காக சேலையூர் காவல் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார்.



விசாரணை முடிந்து, நேற்று மாலை, தாம்பரம் நீதிமன்ற, மாஜிஸ்திரேட் அனுபிரியா முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். அவரை 15 நாள் சிறையில் அடைக்க, மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார். பின், போலீசார் அவரை சிறைக்கு அழைத்துச் சென்றனர்.குரோம்பேட்டை பஸ் நிலையம் அருகே, ஸ்வேதாவின் படத்திற்கு, சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் மலர் துாவி அஞ்சலி செலுத்தினர்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202111:16:39 IST Report Abuse
அப்புசாமி அவளை குத்தும்போது ஜாலியா இருந்திச்சு. தன்னைக் குத்திக் கொள்ளும்போது வலிக்க ஆரமிச்சுருச்சு.உயிர் வாழ இஷ்டமில்லாத இவன் சோலியை முடிச்சுரலாம். கொலபாதகன்.
Rate this:
Cancel
25-செப்-202110:11:48 IST Report Abuse
kulandai kannan திருக்குவளை என்றாலே தூரவிலகுவது நல்லது.
Rate this:
Cancel
Vasanth Kumar - Chennai,இந்தியா
25-செப்-202109:27:34 IST Report Abuse
Vasanth Kumar காதலுக்கு துரோகம் செய்தவள் வாழ்வதில் அர்த்தமில்லை ,பாவம் அந்த இளைஞரின் எதிர்காலம் வருத்தத்திற்குரியது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X