கண்காணிப்பு கேமரா சீரமைப்பு துவக்கம் | சென்னை செய்திகள் | Dinamalar
கண்காணிப்பு கேமரா சீரமைப்பு துவக்கம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
06:33

அண்ணாசாலை : சென்னையில் உரிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை சீரமைக்கும் பணியை, காவல் துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.



சென்னையில் குற்றச்சம்பவங்கள் தடுக்கவும், அவற்றில் ஈடுபடும் குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்கவும், ஆயிரக்கணக்கான கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளன.சில இடங்களில்கண்காணிப்பு கேமராக்கள் உரிய பராமரிப்பு இல்லாமல் பழுதடைந்து காணப்பட்டன.அவற்றை விரைந்து சீரமைக்க போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டார்.அதன்படி, தற்போது பழுதடைந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் சீரமைத்து வருகின்றனர்.



இதுகுறித்து உதவி ஆய்வாளர் கூறியதாவது:அண்ணா சாலை காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில், 850 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில கண்காணிப்பு கேமராக்கள் பழுதடைந்திருந்தன. ஒயிட்ஸ் சாலையில் பழுதடைந்த கேமரா சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, பட்டூல்லாஸ் சாலையில் சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது.விரைவில் பழுதடைந்த கேமராக்கள் அனைத்தும் சீரமைக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X