மெட்ரோ ரயில்களில் ஞாயிறு, பொது விடுமுறை நாட்களில் கட்டண சலுகை; பயணியர் கோரிக்கை
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
06:36

பண்டிகை காலங்கள் நெருங்குவதையொட்டி, மெட்ரோ ரயில்களில் ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில், 50 சதவீத கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என, பயணியர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



சென்னை விமான நிலையம் - விம்கோ நகர்; பரங்கிமலை - எம்.ஜி.ஆர்., சென்ட்ரல் இடையே இயக்கப்படும் மெட்ரோ ரயிலில், கொரோனா தாக்கத்துக்கு முன், 'டிராவல் கார்டு' வாங்கி பயணம் செய்பவர்களுக்கு 10 சதவீதம் கட்டண சலுகையுடன், ஞாயிற்றுக் கிழமைகளிலும், அரசு பொதுவிடுமுறை நாட்களிலும் 50 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்பட்டது.



கொரோனா தாக்கத்தால் மெட்ரோ ரயில் ரத்து செய்யபப்ட்டு, மீண்டும் துவங்கப்பட்டபோது, கட்டண சலுகைகளில் மாற்றம் செய்யப்பட்டது. 'டிராவல் கார்டு' மற்றும் மொபைல் போனில், 'கியூ ஆர்' கோடு வசதியை பயன்படுத்தி பயணிப்பவர்களுக்கு, 20 சதவீதம் கட்டண சலுகை வழங்கப்படுகிறது. ஞாயிறு மற்றும் அரசு பொதுவிடுமுறை நாட்களில் அளிக்கப்பட்ட 50 சதவீதம் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டுள்ளது.



இந்நிலையில், தற்போது மெட்ரோ ரயில்களில் பயணியர் வரத்து கொரோனா ஊரடங்கிற்கு முந்தைய நிலையை எட்டிஉள்ளது. பண்டிகை நாட்கள் வருவதையொட்டி, பயணியர் வரத்து மேலும் அதிகரிக்கும். எனவே, ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில் 50 சதவீத கட்டண சலுகையை மீண்டும் அறிவிக்க வேண்டும் என, பயணியர் தரப்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.



இது குறித்து, மெட்ரோ ரயில் பயணியர் கூறியதாவது: மெட்ரோ ரயில்களில் பயணிப்போர் எண்ணிக்கை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நவராத்திரி பண்டிகை, தீபாவளி அதை தொடர்ந்து கிறிஸ்துமஸ், புத்தாண்டு என, அடுத்தடுத்த மாதங்களில் பண்டிகைகள் வருகின்றன.இதனால், ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் மக்கள் கடை வீதிகளுக்கு செல்வது அதிகரிக்கும்.



இந்த சூழலில், ஞாயிறு மற்றும் பொது விடுமுறை நாட்களில், ஏற்கனவே அமலில் இருந்த 50 சதவீத கட்டண சலுகையை மீண்டும் அமல்படுத்தினால், அதிகம் பேர் பலனடைவதுடன், மெட்ரோ ரயில்களில் பயணியர் வரத்தும் அதிகரிக்கும். மெட்ரோ நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.



- நமது நிருபர் -

 

Advertisement
மேலும் சென்னை மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
25-செப்-202111:12:35 IST Report Abuse
அப்புசாமி எதுக்குடா ஓசி, இலவசம், கட்டணச் சலுகைன்னு அலையுறீங்க? காசு இல்லைன்னா ஏன் கெளம்புறீங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X