தேர்தல் பணிகளில் ஊழியர்கள் விறுவிறு; துருப்பிடித்த பெட்டி வைத்து பயிற்சி
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
07:17

காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ளாட்சி தேர்தலில் பணியாற்றவுள்ள அரசு ஊழியர்களுக்கு முதற்கட்ட பயிற்சி நேற்று துவங்கியது. துருப்பிடித்த பெட்டி வைத்து, ஊழியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது.



காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல், அக்., 6ம், 9ம் தேதிகளில் நடக்கிறது. கடந்த 15 - 22ம் தேதி வரை வேட்புமனுக்கள் பெறப்பட்டு, நேற்று முன்தினம் பரிசீலிக்கப்பட்டன.இந்நிலையில், ஓட்டுப்பதிவு நடைமுறைகள் குறித்து, ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு, நேற்று, முதற்கட்ட பயிற்சி அளிக்கப்பட்டது.நியமனம்இதில் 12 - 15 ஓட்டுச்சாவடிகளுக்கு, ஒரு மண்டல அலுவலர், உதவி மண்டல அலுவலர், உதவியாளர் என நியமிக்கப்பட்டுஉள்ளனர்.



ஓட்டுப்பதிவிற்காக ஒற்றை வார்டுக்கு, ஒரு ஓட்டுப்பதிவு தலைமை அலுவலர்; இரட்டை வார்டுக்கு இரு தலைமை அலுவலர்கள்; மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் ஆகிய பதவிகள் ஓட்டுப்பதிவிற்கு தனித்தனி அலுவலர்கள், பிற ஊழியர் என, ஏழு முதல் எட்டு பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.இவர்களுக்கான முதற்கட்ட பயிற்சி, காஞ்சிபுரம் மாவட்டத்தின் ஐந்து ஒன்றியங்களில் நேற்று துவங்கியது.



ஐந்து ஒன்றியங்களிலும், 5,053 அரசு ஊழியர்கள் இதில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டது. அரசு பள்ளி ஆசிரியர்கள் 4,100 பேர் பங்கேற்றதால் அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகள், சில கல்லுாரிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது.அரசு ஊழியர்களுக்கு ஓட்டுச்சாவடி குறித்த பயிற்சிகளை, 101 மண்டல அலுவலர்கள் வழங்கினர். ஓட்டுச்சீட்டு முறையில் தேர்தல் நடைபெற உள்ளதால், ஓட்டுப்பெட்டியில் எப்படி சீல் வைப்பது; ஓட்டுப்பெட்டியை எப்படி திறப்பது என்பது குறித்து மண்டல அலுவலர்கள் பயிற்சி அளித்தனர்.மேலும், தேர்தல் நடைமுறை, நான்கு வகையான உள்ளாட்சி பதவிகள் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.



காஞ்சிபுரம் அடுத்த கீழம்பியில் நடந்த பயிற்சி முகாமில், கலெக்டர் ஆர்த்தி, நேரில் சென்று பார்வையிட்டார். பயிற்சி நடந்த ஒவ்வொரு அறையிலும், தலா ஒரு ஓட்டுப் பெட்டியை கொண்டு பயிற்சி வழங்கப்பட்டது.அப்போது, ஓட்டுப்பெட்டியை திறக்கும் நடை முறை விளக்கப்பட்டது. அரசு ஊழியர்கள், பெட்டியை திறக்க முடியாமல் மிகவும் சிரமப்பட்டனர். பழைய பெட்டிகள் என்பதால், பெரும்பாலான பெட்டிகள் துரு பிடித்திருந்தது.



பயிற்சியில் அரசு ஊழியர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும் என தேர்தல் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆனாலும் சிலர் பயிற்சிக்கு வரவில்லை. அதற்கான காரணம் கேட்டு குறிப்பாணை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என, தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.



உத்திரமேரூர் ஒன்றியத்தில் உள்ள ஓட்டுச்சாவடிகளில் பணிபுரியவுள்ள, 1,593 தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு, உத்திரமேரூர் மல்லியங்கரணையில் உள்ள மீனாட்சி அம்மன் பாலிடெக்னிக் கல்லுாரியில் நடந்தது.ஆய்வுசெங்கல்பட்டு மாவட்டத்தின் பல அரசு பள்ளிகளில் இப்பயிற்சி முகாம் நடந்தது. ஓட்டுச்சாவடிகள் அமைவிடம் அறிவது, வாக்காளர்கள் பட்டியல், ஓட்டுச்சீட்டுகள், அவற்றின் தொடர் எண்கள் ஆகியவற்றை சரிபார்ப்பது உள்ளிட்டவை குறித்து, மண்டல அலுவலர்கள், பயிற்சி அளித்தனர்.



மாதிரி ஓட்டுச்சாவடிகள் அமைத்து, ஓட்டுப்பதிவு நடைமுறை குறித்து, செயல்முறை பயிற்சியும் அளிக்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் பயிற்சி முகாமில், ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் செல்வகுமார் ஆய்வு செய்தார்.



- நமது நிருபர் குழு -

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X