வேட்பாளருக்கு தேவை ஓட்டு; நாட்டுப்புற இசையில் பாட்டு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

25 செப்
2021
07:24

லோக்சபா, சட்டசபை, நகர்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி தேர்தல் என வந்துவிட்டாலே, தேர்தல் சார்ந்த சீசன் நேர வியாபாரம் களைகட்டும்.போஸ்டர் ஒட்டுபவர், மைக்கில் பிரசாரம் செய்யும் பேச்சாளர், ஒலி - ஒளி அமைப்பாளர், பந்தல் போடுபவர், பேண்டு வாத்தியம் என, பல தொழில்காரர்கள் பிசியாக இருப்பர்.இதில் புதுவரவாக தேர்தல் வியூகம் அமைக்க சில நிறுவனங்கள் உள்ளாட்சி தேர்தலில் களம் கண்டுள்ளன.



உத்திரமேரூர் ஒன்றியத்தில், ஊராட்சி தலைவர் பதவிக்கு போட்டியிடுவோருக்கென ஒரு தனியார் நிறுவனம், 'எங்களிடம் வருவோர் அனைவரையும் வெற்றி பெற வைப்பதே எங்களது லட்சியம்' என, தெரிவித்துள்ளது.



அதேபோல், ஈரோட்டை தலைமையிடமாக கொண்ட மற்றொரு நிறுவனம், 'ஒவ்வொரு கட்சிக்கும் தனித்தனி குரல்களில் கொள்கை பாடல்கள் பதிவு செய்து தரப்படும்.'குறுகிய நேரத்தில் குறைந்த விலையில் பல வெற்றி வேட்பாளர்களுக்கு வெற்றி பரப்புரை செய்த கைராசி நிறுவனம்' என, உத்திரமேரூரில் பரவலாக போஸ்டரை ஒட்டியுள்ளது.



முத்தாய்ப்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த ஒரு நிறுவனம், 'உள்ளாட்சி தேர்தலில் வேட்பாளருக்கு தேவை ஓட்டு! அதற்காக நாங்கள் பாடித்தருகிறோம் நாட்டுப்புற இசையில் பாட்டு' என, கூறியுள்ளது.மேலும் 'வேட்பாளரின் சின்னம், தொகுதி, பதவி, வேட்பாளர் பெயரும் பாடலில் இடம்பெறும்' என, அந்நிறுவனம் விளம்பரம் செய்கிறது.



ஆளுங்கட்சி வேட்பாளர்களோ, உள்ளாட்சி தேர்தலில் தோற்றுவிட்டால், ஆட்சிக்கே கெட்ட பெயர் ஆகிவிடும்; எப்படியும் ஜெயித்தே ஆக வேண்டும் என, பலத்த யோசனையில் உள்ளனர்.எதிர்க்கட்சி வேட்பாளர்களோ, 'ஆட்சியில் இல்லாவிட்டாலும், உள்ளாட்சி பதவிகளையாவது பிடிக்க வேண்டும்' என, தேர்தல் வியூகம், புதுவித பிரசார யுக்தி நிறுவனங்களை நாடத்துவங்கியுள்ளனர்.



தமிழகத்தில் ஆட்சி அமைக்க தி.மு.க.,விற்கு தேர்தல் வியூகம் அமைத்து கொடுத்த, பீஹார் மாநில தேர்தல் வியூக ஆலோசகர் பிரசாந்த் கிேஷாரின் 'ஐபேக்' நிறுவனத்தைப்போன்று, தற்போது ஊரக உள்ளாட்சி தேர்தலையொட்டி, உத்திரமேரூரில் தேர்தல் வியூகம் அமைக்கும் சில உள்ளூர் ஐபேக் நிறுவனங்கள் முளைத்துள்ளன.

 

Advertisement
மேலும் காஞ்சிபுரம் மாவட்ட  செய்திகள் :


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X