97 வழக்குகள்: நீலகிரியில் நிலுவை | நீலகிரி செய்திகள் | Dinamalar
97 வழக்குகள்: நீலகிரியில் நிலுவை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
08:47

ஊட்டி:ஊட்டியில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், 97 வழக்குகள் நிலுவையில் உள்ளன.நீலகிரி மாவட்டம், ஊட்டி என்.சி.எம்.எஸ்., வளாகத்தில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை, 97 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஒன்பது மாதங்களாக நீதிபதி நியமிக்கப்படாததால், முக்கிய வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.


வக்கீல் ஜெயச்சந்திரன் கூறுகையில்,''நுகர்வோர் தங்களை தற்காத்து கொள்ள போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. நுகர்வோர் உரிமைகளுக்கு தீர்வு காணும் வகையில், நீதிபதியை விரைவில் நியமிக்க வேண்டும்,'' என்றார்.வக்கீல் நிர்மலா கூறுகையில்,''மக்கள் தாங்களாக முன் வந்து நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வாதாடி உரிமையை பெறலாம். வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், நீதிபதியை நியமிக்க வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் நீலகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X