கோவை குறைதீர் ஆணையத்தில் 'குறை': காலியிடத்தால் நிலுவை வழக்குகள் அதிகரிப்பு
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 செப்
2021
09:56
பதிவு செய்த நாள்
செப் 25,2021 09:51

கோவை: கோவை மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில், தலைவர் பணியிடம் காலியாக இருப்பதால் வழக்குகள் தேக்கம் அதிகரிக்கிறது.


கோவை மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம், கடந்தாண்டு முதல் நுகர்வோர் குறைதீர் ஆணையமாக மாற்றப்பட்டு செயல்பட்டு வருகிறது. நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் மற்றும் இரண்டு உறுப்பினர்கள் முன்னிலையில் விசாரணை நடத்தப்படுகிறது. ஆணையத்தின் தலைவராக இருந்த பாலச்சந்திரன், ஜன., 10ல் ஓய்வு பெற்றார். அதன்பிறகு, தலைவர் பணியிடம் நிரப்பப்படாமல், ஒன்பது மாதங்களாக காலியாக உள்ளது. ஒரு உறுப்பினர் பணியிடமும் காலியாக இருக்கிறது.



ஆணையத்தில் வழக்கு தாக்கல் செய்த, 90 நாட்களில் தீர்வு காணப்பட வேண்டும் என்ற நுகர்வோர் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தலைவர் பணி காலியிடம், வழக்குகள் தாக்கல் மற்றும் நிலுவை வழக்குகள் அதிகரிப்பதால், குறிப்பிட்ட காலத்திற்குள் வழக்கை விசாரித்து முடிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.



வழக்குகள் தேக்கம்



ஆண்டு தோறும், 250 - 300 புதிய வழக்குகள் வரை தாக்கல் செய்யப்படுகின்றன. அதே நேரத்தில், தீர்வு காணப்படும் வழக்குகள், 150-200 என்ற கணக்கில் உள்ளன. இதன் காரணமாகவும் வழக்குகள் நிலுவை அதிகரிக்கிறது. இந்நீதிமன்றத்தில் 2017ல் - 1,039, 2018ல் - 1,003, 2019ல் - 1,100 வழக்குகள் நிலுவையில் இருந்தன. 2020 மார்ச் - அக்., வரை கொரோனா காரணமாக விசாரணை நடத்தப்படவில்லை. 40 வழக்கில் மட்டுமே தீர்வு காணப்பட்டது.



இந்தாண்டில், மூன்று மாதங்கள் ஊரடங்கு காரணமாகவும் விசாரணை நடக்கவில்லை. இதனால் வழக்குகள் தேக்கம், 1,300க்கு மேல் அதிகரித்துள்ளது. இழப்பீடு வழங்காத நிறுவனங்கள் மீது தாக்கல் செய்யப்பட்ட 250 நிறைவேற்று மனுக்களும் நிலுவையில் உள்ளன.



2013 முதல் நிலுவை வழக்குகள் உள்ளன.மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பொறுப்புக்கு, ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதிகள் நியமிக்கப்பட்டு வந்தனர். தற்போது, மாநில நுகர்வோர் ஆணையத்தால், நேர்முக தேர்வு அடிப்படையில், தகுதி பெற்றவர்கள் நியமிக்கப்படுவர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனாலும், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில், தலைவர் பணியிடம் நீண்டகாலமாக நிரப்பபடவில்லை. விரைவில் காலியிடம் நிரப்பினால் மட்டுமே வழக்குகள் மேலும் தேங்குவதை தடுக்க முடியும்.



நுகர்வோர் குறைதீர் ஆணைய தலைவர் பணியிடம் காலியாக இருப்பதால் விசாரணை முடங்கி கிடக்கிறது. ஏற்கனவே கொரோனா காலத்தில் விசாரணை நடக்காமல் மக்கள் பாதிக்கப்பட்டனர். சகஜ நிலைக்கு திரும்பிய பிறகும், தொடர்ந்து நீதிமன்றம் செயல்படாததால், உரிய பரிகாரம் கிடைக்காமல் நுகர்வோர் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தலைவர் பணியிடம் நிரப்ப மாநில நுகர்வோர் ஆணையம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- அருள்மொழி,


கோவை வக்கீல் சங்க தலைவர்.



நுகர்வோர் வழக்குகளை தாக்கல் செய்த, 90 நாட்களில் விசாரித்து இழப்பீடு வழங்க, காலக்கெடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், எந்த ஒரு வழக்கும் குறிப்பிட்ட காலத்தில் விசாரணை முடிவது இல்லை. வழக்கு தாக்கலுக்கு பிறகு, தீர்ப்பு வருவதற்கு மூன்று ஆண்டுக்கு மேல் ஆகிறது. தலைவர் பணி காலியிடம் ஏற்பட்டால், அவற்றை நிரப்ப பல ஆண்டுகள் ஆகிறது.

-- ஆர்.மோகனகிருஷ்ணன்,


வக்கீல், வடவள்ளி, கோவை




97 வழக்குகள் நீலகிரியில் நிலுவை




ஊட்டியில் உள்ள நுகர்வோர் குறைதீர் மன்றத்தில், 97 வழக்குகள் நிலுவையில் உள்ளன.நீலகிரி மாவட்டம், ஊட்டி என்.சி.எம்.எஸ்., வளாகத்தில், மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றம் செயல்பட்டு வருகிறது. 2015ம் ஆண்டு முதல் தற்போது வரை, 97 வழக்குகள் நிலுவையில் உள்ளன. கடந்த ஒன்பது மாதங்களாக நீதிபதி நியமிக்கப்படாததால், முக்கிய வழக்குகள் ஒத்தி வைக்கப்பட்டு வருகிறது.


வக்கீல் ஜெயச்சந்திரன் கூறுகையில்,''நுகர்வோர் தங்களை தற்காத்து கொள்ள போதிய விழிப்புணர்வு தேவைப்படுகிறது. நுகர்வோர் உரிமைகளுக்கு தீர்வு காணும் வகையில், நீதிபதியை விரைவில் நியமிக்க வேண்டும்,'' என்றார்.


வக்கீல் நிர்மலா கூறுகையில்,''மக்கள் தாங்களாக முன் வந்து நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வாதாடி உரிமையை பெறலாம். வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காணும் வகையில், நீதிபதியை நியமிக்க வேண்டும்,'' என்றார்.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X