நிலம் அளவீடு செய்யாமல் குளக்கரையில் கற்கள் பதிப்பு: தமிழக அரசை ஏமாற்றும் பொதுப்பணித்துறை!
Advertisement
 
 
 
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2021
 
எழுத்தின் அளவு:

மாற்றம் செய்த நாள்

25 செப்
2021
10:09
பதிவு செய்த நாள்
செப் 25,2021 10:08

கோவை: பேரூர் சுண்டக்காமுத்துார் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றி, நிலங்களை மீட்காமல், புதிதாக கரை உருவாக்கி, கான்கிரீட் கற்கள் பதிக்கும் வேலையை, பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது.



நொய்யல் ஆறு சீரமைத்தல், நவீனப்படுத்துதல் திட்டத்தில், ரூ.230 கோடியில், குளங்களின் கரைகளை பலப்படுத்தி, கான்கிரீட் கற்கள் பதிப்பது, நீர் வழங்கு வாய்க்கால் புதுப்பிப்பது உள்ளிட்ட வேலைகளை, பொதுப்பணித்துறை மேற்கொள்கிறது. கான்கிரீட் கற்கள் பதிப்பதால், பல்லுயிர் பெருக்கச் சூழல் பாதிப்பதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல் கொடுத்து வருகின்றனர். தி.மு.க., சுற்றுச்சூழல் அணியினரும், அரசின் கவனத்துக்கு இப்பிரச்னையை, நேரடியாக கொண்டு சென்றனர். இதைப்பற்றி கவலைப்படாமல், அப்பணிகளை பொதுப்பணித்துறையினர் தொடர்கின்றனர்.



இதில், பேரூர் சுண்டக்காமுத்துார் குளம், 265 ஏக்கர் பரப்பளவு கொண்டது. 1,350 மீட்டர் நீளத்துக்கு கரை அமைந்திருக்க வேண்டும். குளத்தின் ஒரு பகுதியை விவசாயிகள் ஆக்கிரமித்து, கரும்பு, வாழை, தென்னை பயரிட்டு, சொட்டு நீர் பாசனம் செய்திருக்கின்றனர்.100க்கும் மேற்பட்ட ஏக்கர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருப்பதால், குளத்தில் நீர்த்தேக்கும் பரப்பு சுருங்கியிருக்கிறது. கரையை பலப்படுத்தி, கற்கள் பதிப்பதற்கு முன், நில அளவைத்துறை வசமுள்ள, புல வரைபடத்தின் அடிப்படையில் நில அளவீடு செய்ய வேண்டும்; ஆக்கிரமிப்பு நிலங்களை மீட்க வேண்டுமென, விவசாயிகளில் ஒரு தரப்பினர் கோரி வருகின்றனர்.



ஆனால், பொதுப்பணித்துறையினர் அளவீடு செய்யாமல், அளவீடு செய்தது போல் கணக்கு காட்டுவதற்காக, ஆங்காங்கே கற்களை நட்டு, ஊதா நிற வர்ணம் பூசியிருக்கின்றனர். ஆக்கிரமிப்பை அகற்றி, நிலங்களை மீட்காமல், குளத்துக்குள், கான்கிரீட் தடுப்பு சுவர் கட்டி, புதிதாக கரை உருவாக்கி, கற்கள் பதிக்கும் பணியை மேற்கொள்கின்றனர்.இது தவிர, பேரூர் பேரூராட்சியில் உற்பத்தியாகும் கழிவு நீர் நேரடியாக, குளத்தில் சேகரமாகும் வகையில், கான்கிரீட் கால்வாய் கட்டப்பட்டிருக்கிறது.



இப்பணி துவங்கும்போது, சுத்திகரிப்பு நிலையம் கட்டி, கழிவு நீரை சுத்திகரித்து அனுப்புவதாக, பேரூராட்சி நிர்வாகம் உறுதியளித்ததால், மாவட்ட நிர்வாகம் அனுமதி கொடுத்தது. அவ்வாறு செய்யாமல் நேரடியாக கழிவு நீர் கலக்கிறது. அதையும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்டுகொள்ளாமல் இருக்கின்றனர்.



பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டால், 'இன்னும், 10 நாட்களுக்குள் நில அளவையரை வரவழைத்து, மீண்டும் நில அளவீடு செய்வோம்' என, சொத்தை காரணம் கூறுகின்றனர்.



அவர்கள் கூறுகையில், 'குளத்துக்குள் விவசாயம் செய்வது உண்மையே; 100 ஏக்கர் ஆக்கிரமிப்பில் இருக்க வாய்ப்பில்லை; 10 ஏக்கர் ஆக்கிரமிப்பில் சிக்கியிருக்கலாம். பேரூர் கிராமத்தில் நில அளவீடு செய்து, கற்கள் நட்டுள்ளோம். சுண்டக்காமுத்துார் கிராமத்தில் இன்னும் அளவீடு செய்யவில்லை. நில அளவையரை அழைத்துள்ளோம்; மீண்டும் அளவீடு செய்வோம்' என்றனர்.



ஆனால், விவசாயிகளின் எதிர்ப்பை மீறி, புதிதாக கரை உருவாக்கப்பட்டு, கான்கிரீட் கற்கள் பதிக்கும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது. இவ்விஷயத்தில், தமிழக அரசின் கவனத்துக்கு உண்மை நிலவரத்தைச் சொல்லாமல், ஏமாற்றும் வேலையை பொதுப்பணித்துறையினர் செய்து வருகின்றனர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

 

Advertisement
மேலும் கோயம்புத்தூர் மாவட்ட  செய்திகள் :
முக்கிய செய்திகள்
பொது
பிரச்னைகள்
சம்பவம்


வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (10)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DARMHAR - Los Angeles,யூ.எஸ்.ஏ
25-செப்-202123:16:37 IST Report Abuse
DARMHAR கருணாநிதி எப்பவோ சொல்லிவிட்டாரே கொடுப்பதை கொடுத்து பெறுவதை பெற்றுக்கொள்ளுங்கள் என்று..இப்போது நடப்பது அவரது மகன் ஆட்சி அல்லவா? இதற்கு மேலும் என்ன சொல்ல வேண்டும்.புரிந்தால் சரி.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
25-செப்-202121:29:00 IST Report Abuse
RajanRajan ஆட்சியாளன் ஒருபக்கம் வசூல் ராசா வேலை பார்க்கிறான் இன்னொரு பக்கம் லஞ்சம் கொடுத்து அதிகாரிகளானவனுங்க வசூல் வேட்டை நடத்துறான். எப்படி மக்களுக்கு விடியல் கிட்டும். ஊழல்வாதிகளுக்கு தான் விடியல் போங்க.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
25-செப்-202117:21:45 IST Report Abuse
r.sundaram பொதுபிணித்துறை என்பது சரியே. பத்து ஏக்கர் என்றால் சின்ன விஷயமா? அதில் நீர் தேக்கினால் எத்தனை ஏக்கர் பாசனம் செய்ய முடியும்? ஆக இந்த பொதுபிணித்துறையே தமிழ்நாட்டின் சாபம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X