காலமுறை ஊதியம் கேட்டு ஆஷா தொழிலாளர்கள் மனு | தர்மபுரி செய்திகள் | Dinamalar
காலமுறை ஊதியம் கேட்டு ஆஷா தொழிலாளர்கள் மனு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
14:22

தர்மபுரி: ஆஷா தொழிலாளர்களுக்கு, மத்திய அரசு உயர்த்திய ஊதியத்தை நிலுவையுடன் வழங்க கேட்டு, தர்மபுரி சுகாதார பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில், சி.ஐ.டி.யு., சார்பில் மனு அளித்தனர்.


அதில் அவர்கள் கூறியிருப்பதாவது: ஆஷா தொழிலாளர்களுக்கு, தனித்துறை உருவாக்கி காலமுறை ஊதியம் உள்ளிட்ட அனைத்து சட்ட உரிமைகளை வழங்க வேண்டும். முன்கள பணியாளர்களாக அறிவித்து, காப்பீடு திட்டத்தில் இணைத்து, 50 லட்சம் ரூபாய் குடும்ப பாதுகாப்பு நிதி வழங்க வேண்டும். குறைந்தபட்ச ஊதியமாக, 18 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், ஆஷா ஊழியர்களை இணைக்க வேண்டும். கொரோனா காலத்தில் பணியாற்றிய ஊழியர்களுக்கு, ஊக்க தொகையாக, 20 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். ஆரம்ப சுகாதாரநிலையம் செல்லும் அனைத்து நாட்களுக்கும் பயணப்படி வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, சங்க மாநில இணை செயலாளர் தீபா, சி.ஐ.டி.யு., மாவட்ட துணைத் தலைவர் அங்கம்மாள் தலைமையில் மனு கொடுத்தனர்.


 

Advertisement
மேலும் தர்மபுரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X