ரேஷன் பொருள் வாங்க முடியாமல் நடையாய் நடக்கும் மக்கள் | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
ரேஷன் பொருள் வாங்க முடியாமல் நடையாய் நடக்கும் மக்கள்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
14:31

ஓசூர்: ரேஷன் பொருட்கள் வாங்க முடியாமல், மக்கள் தினமும் அவதிப்படுகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை தாலுகா, தளி கொத்தனூர், பெட்டமுகிலாளம், தளி, கெலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் வசிக்கும் மக்கள், அந்தந்த பகுதிகளில் உள்ள ரேஷன்கடைகளில் பொருட்கள் வாங்கி வந்தனர். பல ரேஷன் கடைகளில் கைரேகைகளை பதிவு செய்ய முடியாத சிக்கல் உள்ளதால், அரிசி, பருப்பு, சர்க்கரை, எண்ணைய், கோதுமை உள்ளிட்ட பொருட்கள் வாங்க முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர். இப்படி பாதிக்கப்படும் முதியவர்கள், பெண்கள் என நூற்றுக்கணக்கானோர், தேன்கனிகோட்டை குடிமை பொருள் தனி தாலுகா அலுவலகத்திற்கு தினமும் வந்து செல்கின்றனர். அவர்களை அதிகாரிகள் கண்டு கொள்வதில்லை. நீண்ட நேரம் காக்க வைத்து, திருப்பி அனுப்புகின்றனர். எனவே, தேன்கனிகோட்டை சுற்று வட்டார கிராமங்களில் உள்ள ரேஷன்கடைகளில், கைரேகை பதிவு பிரச்னைகளை தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ரேஷன் பொருட்கள் தடையில்லாமல் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X