அரசு கட்டடத்துக்கு பூமி பூஜை | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
அரசு கட்டடத்துக்கு பூமி பூஜை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
14:34

ஓசூர்: கெலமங்கலம் ஒன்றிய அலுவலக கட்டடம், பல ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்டதால், மோசமான நிலையில் உள்ளது. அதை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்டுவதற்கு, ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து, ஒருங்கிணைந்த நிதி வருவாய் திட்டத்தின் மூலம், 3 கோடியே, 10 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டு பூமி பூஜை நடந்தது. ஒன்றியக்குழு தலைவர் கேசவமூர்த்தி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தமிழரசன், துரைசாமி முன்னிலை வகித்தனர். தளி இ.கம்யூ., எம்.எல்.ஏ., ராமச்சந்திரன், பூமி பூஜை செய்து கட்டட பணியை துவக்கி வைத்தார். தேன்கனிக்கோட்டை உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் பூதட்டியப்பா, தி.மு.க., ஒன்றிய செயலாளர் கணேசன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் முருகன் உட்பட பலர் பங்கேற்றனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X