தொடர் மழையால் விவசாய பணி மும்முரம் | கரூர் செய்திகள் | Dinamalar
தொடர் மழையால் விவசாய பணி மும்முரம்
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
14:51

அரவக்குறிச்சி: அரவக்குறிச்சி சுற்று வட்டார பகுதிகளில் பெய்த மழையால் விவசாயிகள் அறுவடை பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சுற்றுவட்டார பகுதிகளான ராஜபுரம், வாய்க்காலூர், நம்பகவுண்டனூர் உள்ளிட்ட பல பகுதிகளில் விவசாயிகள் நிலக்கடலை பயிரிட்டுள்ளனர். தற்போது பெய்து வரும் மழையின் ஈரப்பதத்தை பயன்படுத்தி அறுவடை செய்யும் பணியில் அப்பகுதி விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டுள்ளனர். உழவுப்பணி மேற்கொண்டு சோளம், கம்பு உள்ளிட்ட பயிர்களை விதைப்பு செய்து கால்நடைகளுக்காக தீவனங்களை உருவாக்க தீவிரம் காட்டி வருகின்றனர்.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X