கரூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: இறுதி பட்டியலில் 59 பேர் போட்டி | கரூர் செய்திகள் | Dinamalar
கரூர் மாவட்ட உள்ளாட்சி தேர்தல்: இறுதி பட்டியலில் 59 பேர் போட்டி
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
14:52

கரூர்: கரூர் மாவட்ட ஊரக உள்ளாட்சி இடைத் தேர்தலில் இறுதியாக, 59 பேர் களத்தில் உள்ளனர்.


கரூர் மாவட்டத்தில் காலியாக உள்ள தலா, ஒரு மாவட்ட பஞ்சாயத்து கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர், பஞ்சாயத்து தலைவர் மற்றும் 12 வார்டு உறுப்பினர்களுக்கு வரும், 9ல் தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த, 15ல் தொடங்கி, 22 வரை நடந்தது. மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, 22 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, 11 பேரும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு, நான்கு பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு, 28 பேர் உள்பட, 65 பேர் வேட்புமனு தாக்கல் செய்திருந்தனர். மனுக்கள் பரிசீலனை நேற்று முன்தினம் நடந்தது. அதில், மாவட்ட கவுன்சிலர் வேட்புமனு ஒன்றும், வார்டு உறுப்பினர் பதவி வேட்புமனு, இரண்டு உள்பட, மூன்று மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டன. நேற்று க.பரமத்தி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மூன்று பேர் மனுவை வாபஸ் பெற்றனர். இதையடுத்து இறுதியாக, மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு, 21 பேரும், ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு, எட்டு பேரும், பஞ்சாயத்து தலைவர் பதவிக்கு நான்கு பேரும், வார்டு உறுப்பினர் பதவிக்கு, 26 பேர் உள்பட, 59 களத்தில் உள்ளனர்.


 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X