ரேஷன் அரிசி கடத்தல்: இரண்டு பேர் கைது | கரூர் செய்திகள் | Dinamalar
ரேஷன் அரிசி கடத்தல்: இரண்டு பேர் கைது
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
14:54

கரூர்: கரூர் மாவட்டம், வாங்கல் செக்போஸ்டில் குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை எஸ்.ஐ., சத்திய பிரியா உள்ளிட்ட போலீசார் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அந்த வழியாக சென்ற லாரியை சோதனை செய்த போது அதில், 1,050 கிலோ ரேஷன் அரிசி இருந்தது தெரிய வந்தது. அந்த அரிசி நாமக்கல் மாவட்டம், ஆவல் நாயக்கன்பட்டியில் உள்ள கோழிப்பண்ணைக்கு கடத்தி சென்றது தெரியவந்தது. இதையடுத்து, சீராப்பள்ளியை சேர்ந்த லாரி டிரைவர் சேகர், 42, அரிசியை கொண்டு சென்ற குமார், 40, ஆகியோரை குடிமை பொருள் வழங்கல் மற்றும் குற்ற புலனாய்வு துறை போலீசார் கைது செய்தனர்.

 

Advertisement
மேலும் கரூர் மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X