ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சிலை திருட்டு | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
ஆந்திர மாநில முன்னாள் முதல்வர் சிலை திருட்டு
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
15:04

கிருஷ்ணகிரி: ஆந்திர மாநில முன்னாள் முதல்வரின் சிலை திருடப்பட்டது குறித்து, போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், வேப்பனப்பள்ளி அருகே, ஆந்திர மாநில எல்லையில் உள்ள ஓ.என்.கொத்தூர் பகுதியில், இரு ஆண்டுகளுக்கு முன்பு ஆந்திராவின் முன்னாள் முதல்வர் ராஜசேகர ரெட்டியின் சிலை, ஒய்.எஸ்.ஆர்.,காங்., கட்சியினரால் வைக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, அந்த சிலையை உடைத்து மர்ம நபர்கள் திருடி சென்றுள்ளனர். நேற்று காலை அவ்வழியாக சென்றவர்கள், சிலை திருட்டு போனதை கண்டு அதிர்ச்சியடைந்து, போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து, ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீசார் சிலை திருட்டு குறித்து விசாரிக்கின்றனர்.

 

Advertisement
மேலும் கிருஷ்ணகிரி மாவட்ட  செய்திகள் :


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X