கெலவரப்பள்ளி அணையில் தேங்கி நிற்கும் ரசாயன நுரை | கிருஷ்ணகிரி செய்திகள் | Dinamalar
கெலவரப்பள்ளி அணையில் தேங்கி நிற்கும் ரசாயன நுரை
Advertisement
 

பதிவு செய்த நாள்

25 செப்
2021
15:05

ஓசூர்: கெலவரப்பள்ளி அணையில் இருந்து நேற்று 560 கன அடி நீர் திறக்கப்பட்டது. நுங்கும், நுரையுமாக துர்நாற்றத்துடன் தண்ணீர் வெளியேறியது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று முன்தினம் காலை, 400 கன அடி நீர்வரத்து இருந்தது. அணையில் போதிய நீர் இருப்பு இருந்ததால், 400 கன அடி நீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்து விடப்பட்டது. இந்நிலையில், நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால், நேற்று காலை அணைக்கு 560 கன அடியாக நீர்வரத்து அதிகரித்தது. அணையின் மொத்த உயரமான, 44.28 அடியில், 39.03 அடிக்கு நீர் இருப்பு இருந்ததால், தென்பெண்ணை ஆற்றில் 560 கன அடி நீரும் திறந்து விடப்பட்டது. தொழிற்சாலை கழிவுகள் கலந்து வந்த தண்ணீர் ஆற்றில் சென்றதால், நுங்கும், நுரையுமாக துர்நாற்றத்துடன் தண்ணீர் வெளியேறியது. அணை மதகு பகுதியில் ரசாயன நுரை தேங்கி நின்றது.

 

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X