எஸ்.புதுார்;எஸ்.புதுார் அருகே கால்களைப் பதம் பார்க்கும் கரடுமுரடான சாலையால் மக்கள் நடந்து செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர்.இவ்வொன்றியத்தில் கிழவயல் ஊராட்சிக்குட்பட்ட சின்ன கிழவயல் கிராமத்திற்குள் செல்லும் தார்சாலை 10 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்டது. 2 கி.மீ., துாரமுள்ள இச்சாலை கிராமத்தை கடந்து அப்பகுதி கண்மாய் மற்றும் விவசாய நிலங்களுக்கு செல்கிறது. இச்சாலையில் கற்கள் பெயர்ந்து கரடுமுரடாக நடந்து செல்ல கூட முடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதி மக்களும் விவசாயிகளும் அவதிப்படுகின்றனர். இச்சாலை வழியாக டூவீலரில் செல்லும் போது டயர்கள் அடிக்கடி பஞ்சர் ஆகிறது. இரவு நேரங்களில் பலர் கீழே விழுந்து காயமடைந்துள்ளனர். எனவே இச்சாலையை சீரமைக்க அப்பகுதி மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.