தேவகோட்டை,: தேவகோட்டை காஸ்மாஸ் லயன்ஸ் சங்கம் சார்பில் ஆசிரியர் தின விழாவை முன்னிட்டு ஆசிரியர்களுக்கு விருது வழங்கல் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடந்தது.ஆசிரியர்கள் புகழ், மஞ்சுளாபாய், தமிழ்மணி, செல்வி, மாலிசாந்தினி, ரேவதி ஆகிய ஆறு பேருக்கும் விருதுகளை முன்னாள் லயன்ஸ் ஆளுநர் ஜானகிராமன் வழங்கினார். நிர்வாகிகள் பாதம்பிரியான் , இருதயராசன், தட்சிணாமூர்த்தி, தலைமையாசிரியர்கள் சீனிவாசன், நாகராதாகிருஷ்ணன், பொருளாளர் இப்ராஹிம் பங்கேற்றனர் மாநில நல்லாசிரியர் விருது பெற்றவர்களும் பாராட்டப்பட்டனர். செயலர் கருப்பையா நன்றி கூறினார்.