முதுகுளத்துார் : முதுகுளத்துார் அருகே ஏனாதி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி 32, இளஞ்செம்பூரைச் சேர்ந்தவர் ராதிகா 30. கடந்த 7 வருடங்களுக்குமுன் திருமணம் முடிந்து பெண் குழந்தை உள்ளது. மாடசாமி வேன் டிரைவர் வேலை செய்து வருகிறார்.மாடசாமிக்கும் மனைவி ராதிகாவிற்கும் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டுள்ளது. நேற்று அதிகாலை பிரச்னை ஏற்பட்டு மாடசாமி, கழுத்தை நெரித்து ராதிகாவை கொலை செய்தார்.முதுகுளத்துார் இன்ஸ்பெக்டர் மோகன் மாடசாமியை கைது செய்தார்.