பெரியபட்டினம் :முத்துப்பேட்டை கவுசானல் கலை அறிவியல் கல்லுாரியில் அதிரியான் கவுசானல் பிறந்த நாள் விழா நடந்தது.செயலர் மரியசூசை அடைக்கலம் தலைமை வகித்தார். முதல்வர் ஹேமலதா முன்னிலை வகித்தார்.வணிகவியல் கணினி பயன்பாட்டியல் துறை தலைவர் சுஜாதா வரவேற்றார். துணை முதல்வர் ஜோசப் லாசர் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார். பெண்கள் விடுதி இயக்குனர் லூர்துசாமி சிறப்புரையாற்றினார். உதவி பேராசிரியர் ஜெனிட்டா நன்றி கூறினார்.