காஞ்சிபுரம் : கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டவர்களுக்கான, இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் காஞ்சிபுரத்தில் வரும், அக்., 3ல் நடைபெறுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து, காஞ்சிபுரத்தை சேர்ந்த கண் சிகிச்சை முகாம் ஏற்பாட்டாளர் எஸ்.ஆனந்தகுமார் கூறியதாவது:காஞ்சிபுரம் ஆனந்தா டிரேடர்ஸ் அரிசி மண்டி மற்றும் சென்னை அரவிந்த் கண் மருத்துவமனை சார்பில், பெரிய காஞ்சிபுரம் குஜராத்தி திருமண மண்டபத்தில், வரும் அக்., 3ல், இலவச கண்புரை அறுவை சிகிச்சைக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற உள்ளது.அன்று காலை 10:00 மணிக்கு, காஞ்சிபுரம் அரிசி ஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் எஸ்.பரணிதரன், மருத்துவ முகாமை துவக்கி வைக்கிறார்.இதில், சென்னை அரவிந்த் கண் மருத்துவமனையை சேர்ந்த கண் மருத்துவ நிபுணர்கள் பங்கேற்கின்றனர்.
முகாமில் பங்கேற்க விரும்பவோர், கொரோனா தடுப்பூசி இரண்டு 'டோஸ்' அல்லது முதல் டோஸ் போட்டு இருக்க வேண்டும்.கண்புரை நோய் உள்ளவர்கள் அறுவை சிகிச்சைக்காக தேர்வு செய்யப்பட்டு, சென்னை அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு முற்றிலும் இலவசமாக, விழிலென்ஸ் பொருத்தி, அறுவை சிகிச்சை செய்யப்பட உள்ளது.முகாமில் பங்கேற்க விரும்புவோர், 97914 08768, 97516 11431 ஆகிய மொபைல் எண்களில் முன் பதிவு செய்யலாம்.இவ்வாறு அவர் கூறினார்.