ஸ்ரீவில்லிபுத்துார், ஸ்ரீவில்லிபுத்துார் திருவண்ணாமலை சீனிவாச பெருமாள் கோயிலில் புரட்டாசி இரண்டாம் சனி உற்சவம் பக்தர்களின்றி நடந்தது.இதை முன்னிட்டு நேற்று காலை 6:00 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகளை மதுரை பாலாஜி பட்டர் செய்தார். ராஜ அலங்காரத்தில் பெருமாள் எழுந்தருளினார்.ஏற்பாடுகளை தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் செய்திருந்தனர். தடை காரணமாக பக்தர்கள் வராததால் கோயில் வெறிச்சோடி காணப்பட்டது. இதேபோல் காட்டழகர் சுந்தரராஜ பெருமாள் கோயில், வத்திராயிருப்பு சேது நாராயணபெருமாள் கோயில்களில் புரட்டாசி இரண்டாம் சனி உற்சவம் பக்தர்களின்றி நடந்தது.